ஐயப்பனுக்கு மாலை அணியும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்
Report this article
கார்த்திகை மாதம் ஒளிநிறைந்த மாதம்.மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மாதம் என்றே சொல்லலாம்.ஐயப்ப பக்தர்களுக்கு இந்த மாதம் ஒரு விழா கோலம் என்றே சொல்லலாம்.மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள்.
அப்படியாக மாலை அணியும் பக்தர்கள் பல கட்டுப்பாடான விஷயங்கள் கடைபிடிக்க வேண்டும்.அப்பொழுது தான் அவர்கள் ஐயப்பனின் பரிபூர்ண அருளை பெற முடியும்.மேலும் விரத காலங்களில் ஐயப்பனின் நாமம் மற்றும் ஐயப்ப பாடல்கள் பாடுவது மிகவும் அவசியம்.
பொதுவாக இறைவனின் நாமம் சொல்லும் பொழுது அவர்களுக்கு உரிய மந்திரம் சொல்லும் பொழுதும் நம்முடைய தன்னம்பிக்கை உயரும்.இறைவனிடம் இன்னும் அதிகமாக நெருங்கிய உணர்வு கிடைக்கும் மிக முக்கியமாக நம்முடைய மனதை ஒருநிலை படுத்தும்.
அப்படியாக ஐயப்பனுக்கு மாலை அணிவது எவ்வளவு முக்கியமோ அதே போல் மாலை அணியும் பொழுது ஐயப்ப மந்திரம் சொல்லுவது மிகவும் முக்கியம்.நாம் இப்பொழுது மாலை அணியும் பொழுது ஐயப்பனுக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
மந்திரம்
"ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன சுத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நமஹ"
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.