2026 நாளை சனியின் உக்கிர பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியாத 3 ராசிகள்
சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாவார். அந்த வகையில் ஜனவரி 27ஆம் தேதி அன்று சனி பகவான் பார்வை சந்திர பகவான் மீது விழுகிறது. அதாவது சனிபகவான் மீன ராசியில் இருப்பார். சனி பகவானின் மூன்றாம் பார்வை சந்திரன் மீது விழ இருக்கிறது.
இந்த நாளில் மாலை 4. 45 மணிக்கு சந்திரன் மேஷ ராசியை விட்டு வெளியே ரிஷப ராசிக்கு செல்கிறார். ஆக சனியின் மூன்றாம் பார்வை ஒரு சில ராசிகளுக்கு மிகவும் கடுமையாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆதலால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த காலகட்டங்களில் திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு ஒரு சில மன குழப்பங்களும் மனவருத்தங்களும் வரலாம். சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடியவர்களிடம் பழகும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
கடக ராசியினர் இந்த காலகட்டங்களில் மன அமைதி பெற தியானம் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது அவசியம். வீண் செலவுகள் மற்றும் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கண் பிரச்சனை போன்றவை சந்திக்க கூடும். குழந்தைகள் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இந்த காலகட்டங்களில் அவர்களுடைய குடும்பத்தினர் உடைய ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் வீண் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பாராத நபர்களின் சந்திப்பு ஒரு சில சிக்கல் உங்களுக்கு தரலாம். வழக்கு விஷயங்களில் தேவையில்லாத குழப்பங்கள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |