ஜனவரி மாதத்தின் டாப் 3 அதிர்ஷட ராசிகள் யார் ?
சுக்கிரன், செவ்வாய், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் 2025 ஜனவரி முதல் மாதத்தில் ராசி மாறப்போகின்றன.ஜோதிட சாஸ்திரப்படி புதன் டிசம்பர் 4-ல் தனுசு ராசியில் முதலில் சஞ்சரித்து, ஜனவரி 18-ல் தனுசு ராசியில் மறைந்துவிடும்.
பின்னர் மாதத்தின் நடுவில் ஜனவரி 14 அன்று சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார்.சூரியனுக்குப் பிறகு, செவ்வாய் ஜனவரி 21 அன்று மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இதற்குப் பிறகு சில நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 24 அன்று, புதன் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குச் செல்வார்.
அங்கு சூரியனுடன் புதன் இணைவார். இதற்குப் பிறகு மாத இறுதியில் சுக்கிரன் கும்ப ராசியை விட்டு மீன ராசிக்குள் நுழைவார்.ஜனவரி மாதத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் பல ராசிகளுக்கு அவர்களுடைய துறையில் நல்ல மாற்றத்தை கொடுக்க போகிறது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கன்னி:
2025 ஜனவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிக பெரிய யோகத்தை கொடுக்க போகிறது.மாதம் தொடங்கும் பொழுதே உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மாற்றங்களை காண முடியும்.அலுவலகத்தில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.
பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.நண்பர்கள்,உறவினர்கள்,என்று அனைத்து தரப்பில் இருந்தும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட காலம் இது.
மீனம்:
2025 ஜனவரி மாதத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியை விட மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைய போகிறது.மாத தொடக்கத்தில்,அரசியல் செல்வாக்கு மிக்க நபரை சந்திப்பதால் ஆதாயம் ஏற்படும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் முழுவதும்,நிலம்,வீடு,தொழில் முன்னேற்றம் பெறுவதை பற்றியே இருக்கும்.உங்களுக்கு நெருங்கியவர்கள் ஆலோசனை பெற்று காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
கடகம்:
2025 ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதி முதல் பாதியை விட கடக ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமைய போகிறது.அதனால் உங்கள் நேரத்தையும்,உழைப்பையும் சரியாக பயன் படுத்தவேண்டும்.கூட்டு தொழிலில் உங்களுக்கு சாதகமாக அமையும்.
வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை காணமுடியும்.காதல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு காதல் வெற்றி கரமாக திருமணத்தில் அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |