யாருக்கு யோக ஜாதகம்?
மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் எத்தனை?அவர் பக்தர்களின் மீது வைத்திருக்கும் அன்பு தான் எத்தனை ? அவரின் மகிமைகள் அறிந்திட ஒரு பிறப்பு போதாதது. அவரை வணக்க மனம் தூய்மை ஆகும்.
அவரை வணக்க தர்மம் மட்டுமே மனதில் குடியேறும் அவரை வணக்க உலகத்தின் அற்புதங்கள் புரியவரும்.பிறப்பின் பலன் அறியவருவோம்.
அப்படியாக மனிதனாக வாழ்ந்து உலகத்தில் தர்மத்தின் நிலை நாட்டிய மகாவிஷ்ணுவின் அவதாரம் ராம அவதாரம்.
இவர் அயோத்தியில் பிறந்த போது வானில் சூரியன், சுக்கிரன் ,குரு ,சனி, செவ்வாய் என 5 கிரகங்களும் உச்ச பலத்தில் இருந்தன . இதை "பஞ்ச மகா புருஷ யோகம்" என்பர்.
அப்படியாக , அத்தனை யோகம் நிறைந்த இவருடைய ஜாதகத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும்
மேலும் தினமும் காலை அல்லது மாலை 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி , ராமரின் ஜாதகத்தை வழிபட கல்வி வேலைவாய்ப்பு திருமண யோகம் குழந்தை கிடைக்க பெறும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |