ஒருவர் ஜாதகத்தில் திருஷ்டி தோஷம் இருந்தால் அதை எப்படி கழிப்பது?
இந்துக்களில் நாம் கண்டிப்பாக ஜாதகம் எழுதும் வழக்கம் உண்டு.நாம் ஜாதகம் எழுதுவதே ஏதேனும் நல்ல காரியங்கள் செய்யும் பொழுது,ஒரு ஜோதிடரை பார்த்து பலன் கேட்டு தெரிந்து கொள்வதற்கு தான்.
பொதுவாக ஜாதகம் என்பது நமது மனதின் வெளிப்பாடு என்றே சொல்லலாம் .அன்றைய சூழலில் நம் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள்,வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு குருவாக இருந்து பதில் சொல்லுவது தான் ஜாதகம்.
நாம் எப்பொழுதும் ஜாதகம் பார்க்கின்ற பொழுது பாரம்பரியமாக பார்க்கக்கூடிய,நல்ல கணிப்புகள் சொல்லக்கூடிய ஜோதிடர் பார்ப்பது மிக அவசியம்.
"வரும் முன் காப்போம்" தான் ஜாதக கோட்பாடாகும்.சில நேரங்களில் கிரக நிலைகளை வைத்து சில காரியங்கள் செய்தால் நன்மை தரும் தீமை தரும் என்று ஒருவர் ஜாதகத்தை வைத்து கணித்து விடமுடிடியும்.
அப்படியாக. ஜாதகத்தில் தோஷங்களை குறிப்பிட்டு சொல்வது உண்டு .அதில் முக்கியமான மிகவும் ஆபத்தான தோஷமாக இந்த திருஷ்டி தோஷம் கருதப்படுகிறது.
அதாவது "கண்ணடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது" என்று சொல்லுவார்கள்.
அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் பாதகாபதி இருந்தாலும்,லக்கினாபதியுடன் பாதகாபதி சேர்ந்தால் அந்த ஜாதக நபருக்கு திருஷ்டி தோஷம் ஏற்படும்.
அப்படி ஜாதகத்தில் திருஷ்டி இருப்பவர்கள் கால பைரவரை வணக்க செய்வினை திருஷ்டி இருந்தால் விலகும்.
அடுத்தாக இலுப்ப விதையை உடைத்து பொடியாக்கி சம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட வீட்டில் உள்ள திருஷ்டி விலகுவதோடு,வீட்டில் உள்ள தீய சக்திகளும் ஓடிவிடும்.
ஒரு தேங்காயை ஓட்டை போட்டு உள்ளே ஒன்பது நவ தானியங்களை போட்டு அடைத்து அதில் சூடம் வைத்து ஏற்றி திருஷ்டி சுத்தி முச்சந்தியில் உடைக்க திருஷ்டி தீரும்.
மேலும்,கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் செல்லும் பாதையில் அய்யாவாடி என்று ஊர் உள்ளது.அங்கு அமைந்திருக்கும் பிரத்யங்கரா தேவியை வழி பட அனைத்து செய்வினை தோஷம் திருஷ்டி தோஷம் விலகி நன்மை அடையாளம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |