மார்பளவு தண்ணீரில் காட்சி கொடுக்கும் நரசிம்மர் எங்கு தெரியுமா?
இந்த உலகமே ஒரு அதிசயம் தான். அதில் இன்னும் அதிசயம் நிறைந்த வகையில் பல விஷயங்கள் இருக்கிறது. அதில் ஒன்று கோயில்களும் அதன் அமைப்பும். இந்தியாவில் அமைய பெற்று இருக்கும் பல்வேறு கோயில்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அந்த வகையில் காடுகள் சூழ்ந்த பகுதியிலும், மலைகள் சூழ்ந்த பகுதியிலும் கோயில்கள் அமைய பெற்று இருப்பதை நாம் பார்த்து இருப்போம். ஆனால், இங்கு 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் நரசிம்மர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோயிலை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். பிற கோயில்களுக்கு செல்வது போல் இந்த கோயில்களுக்கு நாம் அவ்வளவு எளிதில் சென்று விட முடியாது.
1000 அடி நீளமுள்ள மலையில் நாம் எப்பொழுதும் வறட்சியை காண முடியாது என்கிறார்கள். அதாவது எப்பொழுதும் 4 முதல் 5 அடி வரை நீர் நிறைந்தே இருக்கிறது என்கிறார்கள்.
இந்த நீர் எங்கு இருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாத புதிர் என்றாலும், அந்த நீரில் பல்வேறு மூலிகை சக்திகள் நிறைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த நீர் பல்வேறு வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் அந்த நீரில் நடந்து சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் நமக்கு ஏற்பட்ட வியாதிகளும் தோஷமும் விலகுகிறது என்கிறார்கள்.
இந்த கோயில் அமையப்பெற்று இருக்கும் குகையின் இறுதியில் சுயம்புவாக தோன்றிய ஜர்னி நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகல்நாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்த குகையில் வதம் செய்ததாகவும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணங்கள் கூறுகிறது.
இவரை கட்டாயம் தரிசித்த ஆக வேண்டும் என்று மனஉறுதியுடன் கடினமான பாதைகளை கடந்து சென்றால் அங்கு வீற்றியிருக்கும் ஜர்னி நரசிம்மரை தரிசனம் செய்தால் நரசிம்மரின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் கடினமான காலங்கள் எல்லாம் விலகும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |