சனி நட்சத்திர மாற்றம்- ஜூன் 7 ஆம் தேதி பிறகு ராஜ யோகம் பெரும் ராசிகள்

Report

 நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனிபகவான். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். அப்படியாக, இந்த ஆண்டு மார்ச் 29 அன்று சனி கும்ப ராசியை விட்டு மீன ராசிக்குள் நுழைந்தார். பின்னர் ஏப்ரல் 28 அன்று உத்திராபாதிர நட்சத்திரத்தில் நுழைந்தார். 

மே 26 அன்று சனி ஜெயந்திக்குப் பிறகு 11வது நாளில், சனி உத்திராபாதிர நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் நுழைய உள்ளார். இந்த மாற்றம் ஜூன் 7, சனிக்கிழமை நிகழும். இந்த இடமாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய ராஜயோகத்தை கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ஜோதிடத்தை உடைத்தெரியக்கூடிய சக்தி யாருக்கு உண்டு?

ஜோதிடத்தை உடைத்தெரியக்கூடிய சக்தி யாருக்கு உண்டு?

கன்னி:

சனி பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் நடக்க உள்ளது. திருமணம் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். முடிவிற்கு வராத வேலை எல்லாம் சிறப்பான முடிவை பெரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் மனதில் உள்ள பாரம் குறையும். வாங்கிய கடனை அடைக்கும் பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் நெருக்கமான சூழல் உருவாகும். வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் இது நாள் வரை சந்தித்த குடும்ப பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை பெறும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். சமுதாயத்தில் நற்பெயரும், மதிப்பு கிடைக்கும்.

கும்பம்:

சனி தன் சொந்த வீடான கும்பத்தில் உத்திராபாதிர இரண்டாவது பாதத்தில் நுழைவது மிகவும் நல்லது. இத்தனை நாள் தடங்களான வேலைகள் எல்லாம் சரியான முடிவை பெரும். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கான நேரத்தை செலவு செய்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை தேடிக்கொடுக்கும். வீட்டிலும் குடும்பத்திலும் அமைதியான சூழல் உருவாகும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பொறுமையாக செயல்படுவதால் நினைத்ததை சாதிப்பீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US