2026 சனி வக்ர நிலை: ஜூலை 27 முதல் பிறர் பொறாமைப்படும் அளவு வாழப்போகும் 3 ராசிகள்

Report

  ஜோதிட ரீதியாக ஒன்பது கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனிபகவான் இருக்கிறார். சனி பகவான் கிரகங்களில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அவருடைய ராசியை மாற்றுகிறார். அப்படியாக, தற்பொழுது சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார், சனி பகவான் 27ஆம் தேதி மீன ராசி வக்கிர நிலை அடைகிறார்.

இவர் டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலை 3.51 ஒரு மணி வரை சனி வக்ர நிலையிலே இருப்பார். ஜோதிடத்தின்படி சனி பகவானுடைய வக்ர நிலை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த வக்ர நிலை பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு அடுத்து ஆறு மாதங்களுக்கு வாழ்க்கையில் பொன்னான காலமாக அமையப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:

இவர்களுக்கு சனி பகவானுடைய வக்ரப் பெயர்ச்சியானது போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு கைகளில் பணம் வரப்போகிறது.

குடும்பத்தில் ஏற்பட்ட மன கசப்புகள், அத்தை வழி உறவுகளால் ஏற்பட்ட தொந்தரவுகள் இவை எல்லாம் விலகி மன மகிழ்ச்சியோடு வாழக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். வெளியூர் செல்லும் பொழுது முக்கிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் நல்ல வளர்ச்சியை அடைவீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானுடைய இந்த வக்ரப் பெயர்ச்சியானது இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல நிலையை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு அரசாங்க வழியே ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும்.

உயர் அதிகாரிகள் உறுதுணையை பெறுவார்கள். கடன் சுமை குறையும். ஒரு சிலருக்கு புதிய வீடு, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். திருமணம் பாக்கியம் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் யாரெல்லாம் இவர்களை வேண்டாம் என்று ஒதுக்கினார்களோ அவர்கள் முன்பாக தலை நிமிர்ந்து வாழக்கூடிய காலகட்டமாக மாறப்போகிறது.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வராத விஷயங்கள் இவையெல்லாம் நல்ல முடிவை பெறப்போகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் அற்புதமான பண வாய்ப்புகளை பெற்று கொடுக்கப்போகிறது. குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US