2026 குரு புஷ்ய யோகம்: ஜூன் 18 முதல் ராசிகளுக்கு பண மழை தானாம்

By Sakthi Raj Jun 07, 2026 10:40 AM GMT
Report

 ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். ஒருவர் ஜாதக கட்டத்தில் எவ்வளவு பெரிய பாவம் கிரகமாக இருந்தாலும் அதில் குரு பார்வைப்பட அந்த பாவ கிரகத்தின் தன்மை குறைந்துவிடும். அந்த வகையில், தற்பொழுது குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார்,

இவர் ஜூன் 18ஆம் தேதி பூசம் நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார், இதனால் ஜோதிட சாஸ்திரத்தில் குருவும் பூச நட்சத்திரமும் இணைவது 'குரு புஷ்ய யோகம்' ஆகும். குரு புஷ்ய யோகத்தால் எந்த மூன்று ராசிகள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் பெறுகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 குரு புஷ்ய யோகம்: ஜூன் 18 முதல் ராசிகளுக்கு பண மழை தானாம் | July18 Guru Pushya Yoga Brings Luck For 3 Zodiac

கடக ராசியின் கர்மபலன் என்ன ? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கடக ராசியின் கர்மபலன் என்ன ? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு "குரு புஷ்ய" யோகத்தினால் இவர்களுக்கு நல்ல லாபகரமான தொழில் அமையப்போகிறது. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். அதே போல் மனதிற்கு பிடித்த செயல்களை செய்து மகிழ்வீர்கள்.

நற்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராமல் தடைப்பட்டு இருந்த பணம் எதிர்பாராத விதமாக கைகளுக்கு வந்து சேரும்.

கன்னி:

இவர்களுக்கு குரு பகவான் உடைய இந்த இடம் மாற்றமானது நண்பர்கள் வட்டாரத்தை விரிவு செய்யப் போகிறது. அது மட்டும் அல்லாமல் இனிமையாக பேசி நினைத்ததை சாதிப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் உயர் பதவிக்கான வாய்ப்புகள் உருவாகும்.

நீண்ட நாட்கள் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மன அழுத்தம் விலகி உற்சாகம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக அமையப்போகிறது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் குரு பகவான் உடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன் அளிக்கப் போகிறது. தொழில் ரீதியாக அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்கிறார்கள்.

புதிய வேலை வாய்ப்பு மற்றும் இடமாற்றம் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். இந்த காலகட்டங்களில் மிகுந்த ஆர்வத்தோடும் சுறுசுறுப்போடும் செயல்படுவீர்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US