இன்றைய ராசி பலன்(11-06-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு மனதில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். புதிய நட்புகளால் ஆதாயம் கிடைக்கும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வதால் நன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

உங்களின் தனித்திறமை வெளிப்படும். நண்பர்கள் இடையே சந்தித்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் சந்தித்த நெருக்கடிகள் அகலும். திருமண பேச்சு நல்ல முடிவை பெற்றுக் கொடுக்கும்.

மிதுனம்:

இன்று அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள். தாய் தந்தை உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். சமுதாயத்தில் உங்கள் நற்பெயருக்கு கலங்கம் உண்டாகலாம்.

கடகம்:

பழைய பிரச்சனை ஒன்று நல்ல முடிவைப்பெரும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவார்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும்.

சிம்மம்:

பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி:

இன்று உங்கள் குடும்பத்தில் எதிர்பாராத விதமாக சில சண்டைகளை சந்திக்கலாம். சகோதரன், சகோதிரி இடையே புரிதல் உண்டாகும். உறவுகளிடம் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் உள்ள மணி பிளான்ட் செடி வாடிப்போனால் என்ன நடக்கும் தெரியுமா?

வீட்டில் உள்ள மணி பிளான்ட் செடி வாடிப்போனால் என்ன நடக்கும் தெரியுமா?

துலாம்:

இன்று உங்களுக்கு வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் தெம்பும் தைரியமும் பிறக்கும். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இறைவழிபாடு நன்மையை தரும்.

விருச்சிகம்:

 அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளியூர் பயணத்தில் சில நெருக்கடிகள் ஏற்படும். மனம் குழப்பமடையும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு:

இன்று யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று அறிந்து பேசுவீர்கள். ஒரு சிலருக்கு கால் தொடர்பான விஷயங்களில் சில சிக்கல்கள் வரலாம். பிரிந்த உறவுகள் வழியே சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.

மகரம்:

எதிர்பார்த்த பணம் வரும். புதிய நட்பால் உங்கள் விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த தகவல் வரும். எதிர்பார்த்த பணம் வரும். 

கும்பம்:

யாரையும் நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள், கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும்.

மீனம்:

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் வேலை பளு அதிகரிக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் திடீர் என்று பின் வாங்கலாம்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US