ஜூன் மாதம் வரும் கார்த்திகை விரதம் எப்பொழுது தெரியுமா?
மாசி கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமான் மற்றும் சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய சிறப்பு வாய்ந்த விரதம் தினம் ஆகும். இந்த விரதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் பொழுது அனுஷ்டிக்கப்படும் விரதம் ஆகும். அதே போல் ஜூன் மாதம் இந்த கார்த்திகை விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
அப்படியாக, ஜூன் 22 2025, ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை நட்சத்திரம் மாலை 5.38 மணிக்கு தொடங்கி, 23 ஜூன் 2025 பிற்பகல் 3.16 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் பலரும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதிலும் சிலர் உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்த்து கடுமையான விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
இவ்வாறு கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வது நமக்கு வாழ்க்கையில் உள்ள துன்பங்களை போக்கி நினைத்த காரியம் நடக்க அருள் புரிகிறது. இந்த விரதத்தை யார்வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
வாழ்க்கையில் மோட்சம் தேடுபவர்கள், குடும்ப வாழ்க்கையில் சிக்கலை சந்திப்பவர்கள், நீண்ட வருடமாக குழந்தை வரன் இல்லாமல் இருப்பவர்கள், குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியம், பொருளாதார சிக்கல் மேம்பட கட்டாயம் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வது மிக சிறந்த பலனைக் கொடுக்கும்.
மேலும், இந்த விரதம் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடி சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபாடு செய்து அவர்களுக்கு பழங்கள், பூக்கள் மற்றும் பிற புனிதப் பொருட்களை வைத்து பிரார்த்தைனை செய்யவேண்டும்.
அதோடு விரதம் இருப்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் இறைவனின் பாடல்களும், புனித நூல்களையும் படித்து முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்யவேண்டும். இறுதியாக, அன்றைய நாள் முழுவதும் உணவு எடுத்துக்கொள்ளாதவர்கள் விரதத்தை முடிக்கும் பொழுது முருகப்பெருமானை வழிபாடு செய்து உணவு எடுத்துக்கொண்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
மனம் நிறைய முழு நம்பிக்கையோடு ஒரு விஷயத்தை கடைப்பிடித்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு கட்டாயம் இறைவனின் அருளால் நினைத்தது எல்லாம் நடக்கும்.
ஆக, துவண்டு போகாமல் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் துயர் விலக இந்த கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் உங்கள் கவலைகள் எல்லாம் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |