குருபெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார் யார்னு தெரியுமா?

By Manchu Mar 24, 2026 04:14 PM GMT
Report

ஜோதிடத்தில் முக்கியமான கிரகமாக இருக்கும் குருபகவான் பெயர்ச்சி அடையும் நிலையில் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தினை பெறுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி 

ஜோதிடத்தில் ஒன்பது கிரகத்தில் முக்கியமான கிரகமாக குருபகவான் இருக்கும் நிலையில், தற்போது மிதுன ராசியில் இருந்து வருகின்றார்.

ஜுன் 2ம் தேதி குரு மிதுன ராசியிலிருந்து, அதன் உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைகின்றார். இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இதனால் சில ராசியினருக்கு நேர்மறை மாற்றங்கள், சுப பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

குருபெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Jupiter Transit 5 Zoadic Lucky Money Success

மேஷம்

மேஷ ராசியினர் இந்த கிரகப் பெயர்ச்சியில் நன்மையை பெறுகின்றனர். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடங்களில் வெற்றி கிடைப்பதுடன், தாமதமாகும் பணிகள் படிப்படியாக முடிவடையும். கல்வி துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

குருபெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Jupiter Transit 5 Zoadic Lucky Money Success

மிதுனம்

குரு பெயர்ச்சியில் மிதுன ராசியினரின் நிதி நிலையில் முன்னேற்றம் அடைவார்கள். முதலீடு மூலமாக ஆதாயம் கிடைப்பதுடன், புதிய வருமானத்திற்கான வழியும் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலனையும் பெறுவீர்கள். நீண்ட காலம் உள்ள தகராறு இப்போது முடிவிற்கு வரும்.

கடகம்

கடக ராசியினருக்கு இந்த பெயர்ச்சியானது பல சாதகமான வாய்ப்புகள் கிடைப்பதுடன், வேலைவாய்ப்பு, தொழிலில் முன்னேற்றமும், புதிய வழிகளும் கிடைக்கும். பணியில் உங்களது கடின உழைப்பு பாராட்டை கொடுக்கும். உயர்அதிகாரிகளிடம் நல்ல பெயர், குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருகும்.

குருபெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Jupiter Transit 5 Zoadic Lucky Money Success

கன்னி

கன்னி ராசியினர் இந்த காலத்தில் முடிவிற்கு வராத பல பணிகளை முடித்துவிடும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு, புதிய திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதுடன், எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் முன்பை விட அதிக மகிழ்ச்சியளிக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமாக இருப்பதுடன், தொழில் சார்ந்த வேலையில் வெற்றியும், புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். முயற்சியினால் எதையும் வெற்றி பெறுவதுடன், தொழிலில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

குருபெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Jupiter Transit 5 Zoadic Lucky Money Success

குருவின் அருளை பெறுவதற்கு, வியாழக்கிழமைகளில் "ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்" என்ற குரு காயத்ரி மந்திரத்தை கூறி, "குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹ குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ" என்ற ஸ்லோகத்தை ஜெபிக்கவும். 

குருவின் அருளைப் பெற ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருந்து மஞ்சள் நிற ஆடைகள், புஷ்பராகம் அணிந்து, மஞ்சள் நிற மலர்களால் வழிபடவும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US