கடன் தொல்லையிலிருந்து விடுபட 12 ராசிகளும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ப செய்யவேண்டிய பரிகாரங்கள்
ஒரு மனிதனுக்கு நேரம் சரி இல்லை என்றால் அந்த மனிதனுக்கு பிரச்சனைகள் பல்வேறு திசையில் இருந்து வந்து விடும். அதில் ஒன்று தான் கடன் பிரச்சனை. கடன் தலைக்கு மேல் வந்து விட்டால் நம்முடைய நிம்மதியை இழந்து விடுவோம்.
அப்படியாக, 12 ராசிகளுக்கும் அவர்களின் கடன் பிரச்சனை குறைய அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ப செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் கடன் சுமை குறைய தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில் பசுவிற்கு கொடுத்து வந்தால் விரைவில் கடன் பிரச்சனை குறையும்.
ரிஷபம்:
இவர்கள் ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை பசுவிற்கு வெள்ளிக்கிழமை அன்று மாலை வேளையில் கொடுத்து வந்தால் நல்ல மாற்றம் காணலாம்.
மிதுனம்:
இவர்கள் தினமும் குளிக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்து குளித்து வந்தால் கடன் பிரச்சனை விலகும். அதோடு மாலை வேளையில் சூரியன் அஸ்தமனத்திற்கு முன் தரிசனம் செய்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்:
இவர்கள் ஞாயிற்று கிழமைகளில் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விட்டு வரலாம், அல்லது வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுக்கலாம். அவ்வாறு செய்து வந்தாலும் நல்ல பலன் கொடுக்கும்.
சிம்மம்:
இவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் அரச மரத்தடியில் மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர வெகு விரைவில் கடன் சுமை குறையும்.
கன்னி:
இவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் உளுந்த வடையை தானம் செய்து வரவேண்டும். அதோடு தினமும் துளசி செடிக்கு நீர் ஊற்றி ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
துலாம்:
இவர்கள் பெண்களுக்கு புடவைகள், ரவிக்கை துணி மற்றும் வளையல்கள் வாங்கி கொடுத்து வந்தால் விரைவில் கடன் தொல்லை தீரும்.
விருச்சிகம்:
இவர்கள் கோயிலில் நடைப்பெறும் ஹோமத்திற்கு தேவைப்படும் செங்கற்களை கொடுக்கலாம். கழுதைக்கு உணவிடுவது, குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்து வருவது நல்ல பலன் கொடுக்கும்.
தனுசு:
ஏழை எளிய மக்கள் வீடு கட்ட கஷ்டப்பட்டால் அவர்களுக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.
மகரம்:
இவர்கள் சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.
கும்பம்:
இவர்கள் வியாழன் மாலை அன்று 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றவர்களுக்கு தானம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்:
இவர்கள் கடன் சுமை குறைய தொழு நோயாளிகளுக்கு மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து உணவு கொடுத்து வந்தால் வெகு விரைவில் இவர்களின் கடன் சுமை குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |