காகத்திற்கு உணவு வைப்பதால் மனம் குளிரும் சனி பகவான்
நம் வீட்டில் இன்று வரைக்கும் காலையில் எழுந்த உடன் மற்றும் சமைத்த உணவை முதலில் காகத்திற்கு வைத்த பிறகே நாம் உண்ண தொடங்குவோம்.
அப்படியாக காகத்திற்கு உணவு அளிக்க கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். காகம் சனி பகவானின் வாகனமாகக் கருதப்படுகிறது.
நமது முன்னோர்களாகக் கருதப்படும் காகங்களுக்கு அமாவாசை போன்ற நாட்களில் உணவு படைத்து வழிபடுவது வழக்கம் வைத்து இருந்தனர் .அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் அமாவாசையன்று காகம் வடிவில் நமது இல்லம் தேடி வந்து உணவு உண்டு மனம் குளிர்ந்து நமது குடும்பத்துக்கு ஆசி வழங்குவதாக நம்பிக்கை உண்டு.
காகத்திற்கு உணவு வைக்கும்பொழுது சுத்தமான உணவை, புதிதானவற்றையும், இலையில் வைத்துப் படைக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் எள் கலந்த சாதத்தை காகத்துக்குப் படைத்தால் சனி பகவானின் ஆதிக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.
காகத்திற்கு உணவு வைக்கும்போது குளிக்காமல் வைக்கக் கூடாது. அதேபோல், காகத்திற்கு எக்காரணம் கொண்டும் அசைவ உணவுகள், பழைய உணவை வைக்கக் கூடாது.
பிஸ்கட், கரகரப்பான, காரம், இனிப்புகளை வைக்கலாம். காக்கையை வழிபடுவதால் சனி பகவான், எமன் மற்றும் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவார்கள்.
மேலும் ஒருவர் காகத்திற்கு உணவு வைப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத கடன்கள் தீரும். நமது முன்னோர்கள் நேரடியாக வராமல், காகம் உருவத்தில் வந்து நமக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம்.
சனி பகவானும், எமனும் சகோதரர்கள்.காகத்திற்கு உணவு இடுவதால் இருவரும் திருப்தி அடைவர். விருந்தினர் வருவதையும், நல்ல செய்திகள் வரப்போவதையும் முன்கூட்டியே நமக்கு காகம் கரைந்து குரல் கொடுப்பதை அறியலாம். காலையில் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் நடக்கும்.
வாசலை நோக்கி கத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. காகத்துக்கு தினசரி உணவு வைத்தால் அது தினமும் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு வந்து உங்களை கரைந்து அழைப்பதை காணலாம். தினமும் காகத்திற்கு உணவு வைத்தால் மறைந்த முன்னோர்களின் ஆசியும், சனி பகவானின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |