கிளி ஏந்திய நிலையில் காட்சி கொடுக்கும் முருகப்பெருமான்

By Sakthi Raj Jul 20, 2024 01:00 PM GMT
Report

கிளி என்றாலே அழகிய பறவை என்றும் பிறகு நினைவிற்கு வருவதும் மீனாட்சி அம்மன் தான்.மீனாட்சி அம்மன் கையில் அழகா நிற்கும் கிளியை அம்மாவுடன் தரிசிப்பது காண கிடைக்காத காட்சி.

அப்படியாக முருகன் பல கோலங்களில் நமக்கு ஒவ்வொரு இடத்திலும் காட்சி கொடுக்கிறார். அப்படியாக பழநிக்கு நிகரான தலம் இது.

இங்கே கனககிரி திருத்தலத்தில் முருகப்பெருமான், கிளி ஏந்திய நிலையில் தரிசனம் கொடுக்கிறார்.இக்கோயிலில் அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம் என்று பல சிறப்புகளை கொண்டு இருக்கிறது.

கிளி ஏந்திய நிலையில் காட்சி கொடுக்கும் முருகப்பெருமான் | Kaiyil Kiliyudan Murugaperuman Worship

அதுமட்டும் அல்லாமல் முருகன் சந்நிதியில் ஜாதகத்தை வைத்து வழிபட்டால் விரைவில் கல்யாண யோகம் உண்டாகும். கனககிரி முருகன் கோயிலில் செவ்வாய்க் கிழமை சத்ருசம்ஹார திரிசதி அர்ச்சனை வைபவத்தைத் தரிசித்து வழிபட்டால், எதிரிகள் அடங்குவார்கள்.

அவர்களால் ஏற்படும் தொல்லைகள் விலகும். மேலும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் முருகபெருமான் கையில் மாம்பழத்துடன் இருக்கும் வேலவனை தரிசிக்கலாம்.

கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில் வேலாயுதமும், தேவியர் இருவரும் இன்றி தனித்து அருளும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

துளசி செடியை வளர்த்து பூஜிப்பதால் கிடைக்கும் பாக்கியம் என்ன?

துளசி செடியை வளர்த்து பூஜிப்பதால் கிடைக்கும் பாக்கியம் என்ன?


வஜ்ராயுதம் ஏந்திய முருகனை சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம்.

திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடை யான்பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய தலங்களில் வில்லுடன் காட்சி தருகிறார்

முருகப் பெருமான். வில்- அம்பு ஏந்தி, வேட்டைக்குச் செல்வது போல் முருகன் காட்சி தரும் தலம் திருவையாறு.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US