நினைத்ததை சாதிக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பைரவர் மந்திரம்

By Sakthi Raj Oct 24, 2024 05:28 AM GMT
Report

சிவபெருமான் அவதாரங்களில் ஒருவர் காலபைரவர்.இவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார்.அதாவது இவருடைய வழிபாடும் இவருடைய மந்திரங்களும் உச்சரிக்க வாழ்க்கையில் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.

அப்படியாக மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும்.அதை அடைந்து ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.சில சமயங்களில் ஏதேனும் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.அவர்கள் நினைத்ததை சாதிக்க கட்டாயம் பற்றி கொள்ள வேண்டியவர் கால பைரவர்.

நினைத்ததை சாதிக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பைரவர் மந்திரம் | Kalabairavar Manthiram

எல்லா நாளும் பைரவ வழிபாட்டுக்கு உகந்த நாள் என்றாலும் அவருக்குரிய அஷ்டமி திதியில் வழிபாடு செய்வது மிக சிறந்த பலன்களை தரும்.இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவரை இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் காரிய தடைகள் நீங்கி நினைத்த காரியத்தை சாதிக்க முடியும்.

பொதுவாக அஷ்டமி திதி அன்று நாம் காலபைரவருக்கு பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம்.

இவ்வாறு ஒவ்வொரு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அதற்கான பலன் கிடைக்கும் என்றாலும் இவை ஏற்ற இயலாதவர்கள் ஒரே ஒரு நெய் தீபத்தை மட்டுமாவது ஏற்றி வைத்து கால பைரவருக்கு சிவப்பு நிற மலர்களால் மாலை வாங்கி தரலாம்.

நினைத்ததை சாதிக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பைரவர் மந்திரம் | Kalabairavar Manthiram

பிறகு அங்கேயே அமர்ந்து இந்த மந்திரத்தை நம்மால் இயன்ற அளவு குறைந்தபட்சம் 21 முறையாவது சொல்ல வேண்டும். கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

வீட்டில் காலபைரவர் படம் இருந்தால் சுத்தம் செய்து சிவப்பு நிற மலர்களை சூட்டி ஒரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். காலபைரவரின் படம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்தும் இந்த மந்திரத்தை கூறலாம்.

அதிர்ஷ்டம் கிடைக்க புதன் கிழமை இந்த நிற ஆடையை அணியுங்கள்

அதிர்ஷ்டம் கிடைக்க புதன் கிழமை இந்த நிற ஆடையை அணியுங்கள்

மந்திரம்

ஓம் கால காலாய வித்மஹே கால தீத்தாய தீமஹி தந்நோ கால பைரவ பிரசோதயாத்.

எளிய மந்திரமாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும்.வாழ்க்கையில் பயம் பதட்டம் ஏற்படும் பொழுது கட்டாயம் இந்த மந்திரம் சொல்ல பயம் விலகும்.

பைரவர் வெற்றி கூறிய பயத்தை போக்கும் கடவுள்.இவரை பற்றி கொண்டால் எதிரிகள் தொல்லை,கஷ்டம் விலகி வாழ்க்கையில் சிறந்த மாற்றம் அமைவதோடு நினைத்ததை சாதிக்க முடியும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US