காளியம்மன் அருளால் வீடுகளில் கண் திருஷ்டி விலக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

By Sakthi Raj Oct 11, 2026 11:53 AM GMT
Report

கண் திருஷ்டி என்பது பொல்லாதது என்று முன்னோர்கள் சொல்வது உண்டு. அதை நாம் நிஜ வாழ்க்கைகளிலும் காணலாம். தீராத கண் திருஷ்டி ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டது என்றால் அந்த நபர் பெரிய ஒரு பாதிப்பை சந்திக்க கூடும். அந்த வகையில், காளியம்மனுடைய அருளால் கண் திருஷ்டி நீங்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, காளியம்மன் சக்தியின் வடிவமாகவும் தீமைகளை அழித்து பக்தர்களை காப்பவராகவும் இருக்கிறார்.

காளியம்மன் அருளால் வீடுகளில் கண் திருஷ்டி விலக செய்ய வேண்டிய பரிகாரங்கள் | Kali Amman Remedies To Remove Evil Eye

அதனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையில் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து காளியம்மன் படத்திற்கு முன்பாக நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி செம்பருத்தி பூ அல்லது வீடுகளில் இருக்கக்கூடிய பூக்களை சமர்ப்பித்து பழம் அல்லது முடிந்த நெய்வேத்தியங்கள் படைத்து கீழே இருக்கின்ற இந்த மந்திரத்தை 11 முறை அல்லது 21 முறை நீங்கள் பாராயணம் செய்யலாம்.

குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள்

குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள்

காளியம்மன் போற்றி மந்திரம்:

" ஓம் சக்தி! பராசக்தி! அன்னை காளி அம்மனை போற்றி! எங்கள் குடும்பத்தை காத்தருள்வாயே!"

ஜாதகத்தில் உங்களுக்கு எந்த தசா புத்தி நடக்கிறது? எந்த தெய்வத்தை வழிபாடு செய்யலாம்?

ஜாதகத்தில் உங்களுக்கு எந்த தசா புத்தி நடக்கிறது? எந்த தெய்வத்தை வழிபாடு செய்யலாம்?

இந்த எளிய மந்திரம் தான் நம்முடைய கண்திருஷ்டிக்கு கவசமாக அமையப் போகிறது. இதனை பூஜை அறையில் அமர்ந்து பாராயணம் செய்து வருகின்ற பொழுது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய ஆற்றலானது நிலையாகிறது. ஆக எதிர்மறை ஆற்றல் நம்மை விட்டு விலகி ஒரு நேர்மறை ஆற்றலும் ஒரு சக்தியும் நமக்கு கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US