கல்வியா?செல்வமா?வீரமா?

By Sakthi Raj May 06, 2024 11:00 AM GMT
Report

பராசக்தியின் மூன்று அம்சங்களாக இருப்பவர்கள் சரஸ்வதி பார்வதி மகாலட்சுமி இவர்களை ஒரே இடத்தில் தரிசிக்க விரும்பினால் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோவிலுக்கு வாருங்கள்.

மூகாம்பிகை ஜுவாலாம்பிகை கன்னியாகுமரி அம்மன் ஆகியோருக்கு கொட்டிவாக்கத்தில் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் சிலர் நினைத்தனர்.ஆனால் அது முடியவில்லை காலம் கடந்தது ஒரு நாள் ஒருவருக்கு கனவில் பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகள் மூன்று நாகங்கள் சிம்மமும் தோன்றின.

கல்வியா?செல்வமா?வீரமா? | Kalviya Selvama Veerama Sarswati Lakshmi Parvathi

இந்த கனவை அடிக்கடி அவருக்கு வர ஆரம்பித்தது பயந்து போன அவர் தனது குருசாமியிடம் இது குறித்து கேட்டார். அதற்கு அவர் உனது கனவில் வருபவர்கள் வேறு யாருமில்லை அந்த மூன்று குழந்தைகளும் சரஸ்வதி மகாலட்சுமி பார்வதி ஆகிய மூன்று சக்திகள்.

இதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் ஏதேனும் பிரார்த்தனை நிறைவேற்றாமல் இருக்கிறாய் என கேட்டார்.

தமிழக கோயில்களும் அதிசயங்களும்

தமிழக கோயில்களும் அதிசயங்களும்


பிரார்த்தனை எதுவுமில்லை ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தேவியருக்கும் கோவில் கட்ட திட்டம் இருந்தது என்றார். அது உடனே நிறைவேற்றுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொன்னார் குருசாமி.

கல்வியா?செல்வமா?வீரமா? | Kalviya Selvama Veerama Sarswati Lakshmi Parvathi

அதன்படி அவரும் ஞான சரஸ்வதி மூகாம்பிகை லட்சுமி ஆகியோரை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்தால் பிரகாரத்தில் கற்பக விநாயகரை பார்க்கலாம்.

மண்டபத்தை தாண்டியதும் மூன்று கருவறைகள் உள்ளன முதலில் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். இவளை பணிந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

அடுத்து பத்மாசனத்தில் மூகாம்பிகை அமர்ந்துள்ளார் இவளது அருள் பார்வை மனவலிமையை தரும் பயத்தை போக்கும்.

அடுத்து லட்சுமி தேவி இவளை வணங்கினால் கடலைப் போன்ற வற்றாத வளத்தை தருவாள் இப்படி மூன்று அன்னையும் தரிசி போர் கல்வி வீரம் செல்வம் என சகல மங்களங்களையும் பெறுவது நிச்சயம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US