காமாக்யா கோவில்.. ஆதிசக்தி பீடத்தின் அறிந்திடாத ரகசியங்கள்...
இந்தியாவில் இருக்கக்கூடிய 51 சக்தி பீடங்களில் முதன்மையான தலமாகவும் பெண்மையை போற்றக்கூடிய ஒரு ஆன்மீக மையமாகவும் திகழக்கூடிய ஒரு சக்தி பீடத்தை பற்றி தான் பார்க்கபோகின்றோம்.
அதாவது, பாலாறு சுவாமிகள் அவர்கள் அசாமில் இருக்கக்கூடிய புகழ் பெற்ற காமாக்யா தேவி கோயிலுக்கு தான் மேற்கொண்ட பயணம் அதன் வழியாக கிடைத்த ஆழமான அனுபவங்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
அங்கு வழிபாட்டு முறை என்று எடுத்துக் கொள்கின்ற போது இங்கு சிலைகளுக்கு பதிலாக யோனி பீடமே பிரதானமாக வழிபடப்படுகிறது.

அதாவது பக்தர்கள் இருண்ட கருவறைக்கு சென்று இந்த பீடத்தை தரிசனம் செய்கின்றனர். காமாக்கிய தேவியை தவிர இங்குள்ள தசமஹா வித்யாக்கள் எனப்படுகின்ற அன்னையின் 10 பரிணாமங்களுக்கும் இங்கே தனி தனி சன்னதி இருக்கிறது.
இந்த கோவிலில் நடைபெறுகின்ற பலி மற்றும் பூஜைகள் காமாக்கியா தேவிக்கு மட்டுமல்லாமல் அவரை சுற்றி இருக்கின்ற 61 யோனிகளுக்கும் அதாவது அந்த தேவதைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் செம்பருத்தி பூ முக்கிய பிரசாதமாகவும் முக்கிய வழிபாட்டு பொருளாகவும் பார்க்கப்படுகிறது.
இங்கு வருகின்ற பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அந்த அம்மனை தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு அன்பும் அரவணைப்பும் கொடுக்கின்ற ஒரு தெய்வமாகவும் அன்னையாகவும் அம்பாள் போற்றப்படுகிறார்.