தவறியும் இந்த நாளில் மட்டும் முடி வெட்டாதீர்கள்.. காரணம் இதோ
நம்முடைய சாஸ்திரங்களில் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்பதற்கு பின்னாலும் ஒரு காரணத்தை வைத்திருக்கிறார்கள்.
அதேபோல், செய்யக்கூடாது என்பதற்கு பின்னாலும் ஒரு மிகப்பெரிய காரணத்தை வைத்து இருக்கிறார்கள்.
அந்த வகையில், இயல்பாக தலைமுடி அதிகமாக வளர்ந்து இருக்கின்ற பொழுது அதனை வெட்டுவதுண்டு. அதற்கு பின்னாலும் சாஸ்திர ரீதியாக ஒரு சில விஷயங்களை சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. முடி வெட்டுவதற்கான சரியான நாள்:
பொதுவாக, ஒருவர் முடியை வெட்டுவதற்கு என்று சரியான நாளாக சாஸ்திரத்தில் திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை இருக்கிறது. அதை போல், நீங்கள் பிறந்த தினத்தில் முடி வெட்டக்கூடாது முடிந்தவரை இரவு நேரங்களில் முடி வெட்டுவதை தவிர்த்து விடுங்கள்.

2. எந்த நாட்களில் முடி வெட்டக்கூடாது:
ஒருவர் செவ்வாய் சனி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி அமாவாசை கிரகண காலம் விரதம் மற்றும் பூஜை நாட்களில் முடி வெட்டுவதை தவிர்ப்பது நல்லது.
3. முடிவெட்டி உடன் செய்ய வேண்டியது:
முடிவெட்டியுடன் கட்டாயமாக குளிப்பது அவசியம். முடி வெட்டிக்கொண்டு குளிக்காமல் அப்படியே சுப காரியங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுவது நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |