வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் செல்வம் என்பது கட்டாயமாக தேவைப்படுகிறது. அவன் தேவைக்கேற்ப செல்வங்கள் இருந்தால் மட்டுமே ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையை அவனால் நடத்த முடியும், சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும் அவனுக்கு உரிய மரியாதையை பெறலாம்.
அந்த வகையில், நாம் வீடுகளில் செல்வம் பெருகவும் மகாலட்சுமி தாயாரின் அருள் பெறவும் புதன்கிழமை காமாட்சி விளக்கேற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் வழிபாடு செய்யக்கூடிய முறைகளை பற்றி பார்ப்போம்.

வழிபடும் முறை:
புதன்கிழமை அன்று காலையில் நீராடி சுத்தமான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு காமாட்சி விளக்கை எடுத்துக் கொண்டு அதற்கு சமமான குங்குமம் வைத்து மலர்கள் சாற்றி அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிறிய தாம்பூல தட்டை எடுத்துக்கொண்டு அதை சுற்றிலும் மா இலைகளை அழகாக அடுக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு அதனுள் காமாட்சி விளக்கை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். பிறகு காமாட்சி அம்மனுக்குரிய மந்திரம் பாராயணம் செய்யலாம்.
அதோடு இறுதியாக காமாட்சி அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்து உங்களுக்கு தேவையான விஷயங்களை கேட்டு நீங்கள் பிரார்த்தனை நிறைவு செய்யலாம். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து புதன்கிழமை வழிபாடு செய்து வருகின்ற பொழுது நிச்சயம் விரைவில் கடன் தொல்லை விலகும், பொருளாதாரத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |