வீட்டில் கண் திருஷ்டி விலக இந்த ஒரு முடிச்சு போட்டு வைத்தால் போதும்

By Sakthi Raj Nov 05, 2024 07:24 AM GMT
Report

வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் மாறி மாறி வரும்.அப்படியாக இந்த துன்பத்தை பலரும் வெகு சிறப்பாக கடந்து விடுவார்கள்.ஆனால் சிலரால் என்னதான் தைரியமாக இருந்தாலும் இந்த துன்பத்தில் இருந்து வெளியே வருவது சற்று கடினமாக இருக்கும்.

அதற்கு அவர்கள் காரணம் இல்லை என்றாலும் அவர்களை சுற்றி சில எதிர்மறை எண்ணம் தான் கரணம்.இந்த எதிர்மறை எண்ணங்கள் ஒருவரது வாழ்க்கையை புரட்டி போட்டு விடும்.எதிர்பாராத தடைகளை உண்டாக்கி விடும்.

பிறர் நம் மீது எதிர்மறை எண்ணங்களை நேராக செலுத்தாவிட்டாலும் அவர்களின் கண் பார்வை நம்மை வீழ்த்தி விட கூடிய சக்திகள் உண்டு. சில வருடங்கள் முன்னர் வரை வெளியே சென்று வீடு திரும்பினால் கட்டாயம் வெளியே கை கால்கள் கழுவி கொண்டு தான் வீட்டுக்குள் வருவார்கள்.

வீட்டில் கண் திருஷ்டி விலக இந்த ஒரு முடிச்சு போட்டு வைத்தால் போதும் | Kan Thirshti Palngalum Parigarangalum

அதற்கு ஒரு முக்கிய காரணம் சுத்தமாக இருந்தாலும் வெளியில் இருந்து வீட்டிற்கு வரும் பொழுது நல்லது மற்றும் கெட்டது இருக்கும்.அவை நம்மை பற்றி கொள்வதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு கண் திருஷ்டி மற்றும் கெட்ட சக்திகளிடம் இருந்து விலக ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, சதுரவடிவிலான சிகப்பு துணி, சிகப்பு நூல் மட்டுமே போதும்.

வினை தீர கந்த சஷ்டி விரதம் 4வது நாள் சொல்ல வேண்டிய மந்திரம்

வினை தீர கந்த சஷ்டி விரதம் 4வது நாள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கைப்பிடி அளவு கல் உப்பினை உங்கள் உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு, பூஜை அறையில் இருக்கும் உங்கள் வீட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, குலதெய்வத்தின் சாட்சியாக, கெட்ட எண்ணம் பிடித்தவர்கலும், கெட்ட சக்தியையும், கண்திருஷ்டியையும் இந்த வீட்டிற்குள் நுழைய கூடாது என்று மனதார சொல்லி அந்த உப்பை, சிகப்பு துணியில் வைத்து, சிகப்பு நூலால் மூன்று முடிச்சுகள் போட்டு,வீட்டு நில வாசப்படியில், நடுப்பகுதியில் மாட்டிவிட வேண்டும். பிறரிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது என்பது மிகவும் அவசியம்.

ஆக எதற்கும் வருந்தாமல் கெட்ட எண்ணங்கள் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இந்த சிறிய எளிய பரிகாரத்தை செய்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US