கண் திருஷ்டி விலக இந்த வகையில் முயற்சி செய்து பாருங்கள்
கண் திருஷ்டி என்பது மிகவும் பொல்லாத ஒன்று. ஒருவரின் எதிர்மறை பார்வை சக மனிதனை மிகப்பெரிய பாதிப்பு அடைய செய்கிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தான் முன்னோர்கள் காலம் காலமாக வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது திருஷ்டி கழிக்கும் முறையை பின்பற்றினார்கள். அதில் குறிப்பாக கண் திருஷ்டி குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
அப்படியாக திருஷ்டி கழிக்க பல வகைகள் உள்ளது. அதில் யாருக்கு எது வசதியாக உள்ளதோ அதை பின்பற்றி திருஷ்டி கழிக்கிறார்கள். அதாவது சிலர் வீடுகளில் எலுமிச்சை பழத்துடன் சேர்த்து காய்ந்த மிளகாய் கட்டி தொங்க விடுவார்கள், அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டாக கிழித்து அதில் மஞ்சள் குங்குமம் தடவி வீடுகளில் வியாபார இடங்களில் வைப்பார்கள்.
இதை தொடர்ந்து சிலர் குளிக்கும் பொழுது தண்ணீரில் கல் உப்பு போட்டு குளிப்பார்கள்.வெள்ளி செவ்வாய் கிழமைகளால் சாம்பிராணி தூபம் போடுவது போன்ற விஷயங்களை செய்வார்கள்.
இவ்வாறு யாருக்கு எந்த விஷயங்களில் நம்பிக்கை இருக்கிறதோ அதை பின்பற்றி அவர் அவர் திருஷ்டியை கழிப்பார்கள். அந்த வகையில் வீடுகளில் மீன் அழகு மற்றும் வாஸ்து ரீதியான விஷயம் தாண்டி அவை நம் வீடுகளை சூழும் தீய சக்திகளை அகற்றுகிறது என்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக சிவப்பு மற்றும் கருப்பு நிற மீன்களை நம் வீடுகளில் வாங்கி வைத்து வளர்க்கும் பொழுது அவை தீய சக்திகளை முழுமையாக போக்கி நன்மை தருகிறது. மேலும், மீன்களுக்கு எதிற்மறை சக்திகளை உறிஞ்சக்கூடிய சக்தி உண்டு. ஆதலால் நம் வீடுகளில் ஏதெனும் கெட்ட நிகழ்வுகள் நடக்கிறது என்றால் அதை தடுத்து நமக்கு நன்மை அளிக்கிறது. ஆதலால் வீடுகளில் இந்த நிற மீன்கள் வளர்ப்பதும் கண் திருஷ்டி கழிக்கும் ஒரு முறை என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







