கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்

By Sakthi Raj Oct 23, 2024 06:59 AM GMT
Report

மனித வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.ஆனால் மறைமுகமாக பிறரால் ஏற்படும் பிரச்சனை ஒன்று இருக்கிறது.அது தான் கண் திருஷ்டி.இந்த கண் திருஷ்டி ஆனது ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும்.உடல்,மனம்,பணம் என்று இந்த கண் திருஷ்டி ஆனது வீழ்த்தி விட வாய்ப்புகள் இருக்கிறது.

அப்படியாக நமக்கு அன்றாட வாழ்க்கையில் யார் நல்லவர்கள் தீயவர்கள் என்று கணிப்பது மிகவும் சிரமமான விஷயம்.அதில் நாம் யாரையும் நம்பி எந்த ஒரு செயலும் வெளிப்படையாக சொல்லவும் செய்யவும் முடியாத சூழலில் நாம் இருக்கின்றோம்.

கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் | Kan Thirshti Parigarangal Tips

இப்பொழுது பிறர் கண்திருஷ்டியில் இருந்து நாம் எப்படி பாதுகாத்து கொள்வது என்று பார்ப்போம். ஒரு கண்ணாடி பவுல் எஎடுத்துக்கொண்டு அதில் முதலில் ஒரே ஒரு ஜாதிக்காய் போட்டு, அதன் மேலே கல்லுப்பை கொட்டி நிரப்பி விட வேண்டும்.

அதிர்ஷ்டம் கிடைக்க புதன் கிழமை இந்த நிற ஆடையை அணியுங்கள்

அதிர்ஷ்டம் கிடைக்க புதன் கிழமை இந்த நிற ஆடையை அணியுங்கள்

ஜாதிக்காய் வெளியில் தெரியாது அளவு கல்லுப்பு மட்டும் இருக்க வேண்டும்.கல்லுப்புக்கு மேலே 5 மிளகுகளை வட்டமாக அடுக்கி, உங்கள் வரவேற்பு அறையில் வைத்து விட்டால் போதும்.இவ்வாறு செய்ய வீட்டில் ஏற்பட்ட வருமான தடை பண இழப்புகள் சரி ஆகும்.

கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் | Kan Thirshti Parigarangal Tips

இதை உடனே எல்லோர் கண்களுக்கும் படம் படி உங்கள் வீட்டு வரவேற்பதில் அழகாக ஒரு மேஜையின் மேலே தயார் செய்து வைத்து விடுங்கள்.வாரத்திற்கு ஒரு நாள் கல்லுப்பையும் மேலே இருக்கும் மிளகையும் எடுத்து தண்ணீரில் கரைத்து கீழே கொட்டி விடலாம்.

ஜாதிக்காயை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 3 மாதத்திற்கு ஒருமுறை ஜாதிக்காயை மாற்றி வைத்தால் மட்டும் போதும். மிகவும் எளிமையான பரிகாரம் என்றாலும் மிக பெரிய பலன் தரும்.

இதை செய்வதால் ஒருவர் நம் மீது வைத்த கெட்ட எண்ணங்கள் மட்டும் கண் திருஷ்டி விலகி வாழ்க்கையில் பண தட்டுப்பாடு,மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US