கண் திருஷ்டி விலக வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கியமான மூன்று செடிகள்
உலகத்தில் மனித மனமும் பார்வையும் பொல்லாதது.மனதின் வெளிப்பாடு கண்களில் தெரியும்.அது நல்லதாகவும் இருக்கலாம் இல்லை கெட்டதாகவும் இருக்கலாம்.அந்த வகையில் பிற மனிதர்களின் வளர்ச்சி பொறுக்காமல் பொறாமையின் காரணத்தால் ஏற்பாடும் பார்வையால் உண்டாகுவதின் பெயர் தான் கண் திருஷ்டி.
அந்த கண் திருஷ்டி என்பது அவர்கள் வேணும் என்று ஒருவருக்கு தீங்கு செய்யவேண்டும் என்று செய்யவதில்லை.ஆனால் அவர்களின் எதிர்மறை எண்ணம் தான் பிறரது கண் திருஷ்டியாக காரணம் ஆகிறது.
அப்படியாக பிறரால் ஏற்படும் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்க சில ஆன்மீக வழிகள் இருக்கிறது.அதிலும் சில செடிகள் வீட்டில் வைப்பதால் அவை நம் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்கிறது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
நமக்கு ஏற்படும் கண் திருஷ்டிகளை போக்குவதில் முதல் இடம் பிடிப்பது கற்றாழை.வீட்டில் கற்றாழை செடி வளர்ப்பதால் ஆரோக்கிய ரீதியாகவும் பல நன்மைகள் இருக்கிறது.கற்றாழை செடியில் இருக்கக் கூடிய பெரிய மடல்களாக இருக்கக் கூடிய ஒரு கொத்தை அப்படியே வேருடன் பிடுங்கி எடுத்து நன்கு சுத்தம் செய்து ஒரு கருப்பு நூலில் கட்டி வாசலுக்கு வெளியில் மேற்பகுதியில் கட்டி தொங்க விட்டால் அது காய்ந்து போகும் வரை திருஷ்டிகள் எதுவும் நம்மை அண்டாது என்பார்கள். கற்றாழை செடி அவ்வளவு எளிதில் காய்ந்து போகக் கூடிய செடி அல்ல!
நீண்ட காலம் அது காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு பசுமையுடன் இருக்கும் தன்மை கொண்டது எனவே இது வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் அண்டாது. அடுத்ததாக ரோஜா பூச்செடியும் திருஷ்டிகளை கழிக்க உதவி செய்யும் ஒரு அற்புதமான செடியாகும்.
ரோஜா என்றால் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்பும் செடி.கட்டாயம் வீடு என்றால் அங்கு ரோஜா செடி இருக்கும்.அப்படியாக ரோஜா செடிகளில் பல வண்ண நிறங்கள் இருந்தாலும் மஞ்சள் நிற செடியை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த மஞ்சள் ரோஜா செடி வீட்டு வாசற்படியில் மேற்புறப் பகுதியில் வைக்க வேண்டும்.
தெருவில் நடந்து சென்றாலே, உங்கள் வீட்டில் இந்த செடி இருப்பதை அனைவரும் பார்க்கும்படி அமைந்திருக்க வேண்டும்.மஞ்சள் நிற ரோஜா செடி வீட்டில் இருந்தால், நம்மை பார்த்து பொறாமை கொள்பவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். மஞ்சள் நிறத்திற்கு திருஷ்டிகளை ஈர்க்கும் தன்மை உண்டு.
அதனால் தான் பொன் அரளி செடிகளை வீட்டின் முன் வளர்ப்பார்கள். மஞ்சள் நிற அரளி, மஞ்சள் நிற ரோஜா, மஞ்சள் நிற வாசனை அற்ற பூக்களை வீட்டு வாசலில் வளர்ப்பதால் கண் திருஷ்டிகள் அண்டாது. அடுத்ததாக ஆகாச கருடன் கிழங்கு செடி.
ஆகாச கருடன் கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த ஆகாச கருடன் கிழங்கு ஒன்றை வாங்கி பூஜை அறையில் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை தடவி கருப்பு நிற கம்பளி கயிறு ஒன்றை கட்டி வீட்டு வாசலில் தொங்க விட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டிகளும், செய்வினைகளும் வீட்டை விட்டு அகலும் என்பது நிதர்சனமான உண்மை.
நம்முடைய வீட்டில் செய்வினை, ஏவல்கள், திருஷ்டிகள் இருக்கிறதா? என்பதை கூட இது காட்டிவிடும் அற்புதமான மூலிகை செடி ஆகும்.ஆகாச கருடன் கிழங்கு செடியை வீட்டில் கட்டி தொங்கவிட்ட உடன் அதில் பசுமையான கிளைகள் முளைக்க ஆரம்பிக்கும்.
இதுவும் ஆக்சிஜனை இழுத்துக் கொண்டு நீண்ட நாள் மண், தண்ணீர், சூரியன் எதுவும் இல்லாமல் வாழக்கூடிய தன்மை கொண்டது. பசுமையான கிளைகள் முளைத்தால் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை ஆற்றல்களும் இல்லை என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி அல்லாமல் காய்ந்து விட நேர்ந்தால் கெட்ட சக்திகளை ஆதிக்கம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம். வீட்டில் துர் சக்திகள் இருப்பது போல தோன்றினால், இருவேளை சாம்பிராணி தூபத்துடன் கருவேலம் பொடியும், வெண்கடுகு பொடியும் சேர்த்து புகை போடுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு நம்முடைய வீட்டில் இந்த செடிகளை வளர்க்க எப்பேர்ப்பட்ட பாதிப்பில் இருந்தும் நம்மை காப்பாற்றமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |