கணவன் மனைவி ஒற்றுமைக்கு வீட்டில் இப்படி விளக்கேற்றுங்கள்
இந்து மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது வழக்கம்.
வீடுகளிலும் விளக்குக்கு பூஜை செய்வதற்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட வேண்டும்.
குறிப்பாக தீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு துலக்கியோ அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்த வேண்டும்.
நெய் அல்லது எண்ணையை விளக்கில் ஊற்றும் போது விளக்கு நிறைய ஊற்ற வேண்டும்.
அதன் பின் தான் திரி இட வேண்டும். திரி இடும்பொழுது இரண்டு திரிகளை ஒன்றாகச்சேர்த்து முறுக்கி திரி இட வேண்டும்.
திரியை நன்கு நெய்யிலோ, எண்ணையிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்றவேண்டும்.
இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |