நம் கனவுகளை பிறரிடம் சொல்லலாமா? உங்கள் கேள்விக்கான பதில் இதோ
தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. நல்ல தூக்கம் இருந்தால் தான் எண்ணங்களோ செயல்களோ இல்லை பிடித்த உணவோ எடுத்துக் கொள்ள முடியும்.
அப்படி ஒரு மனிதன் அன்றாட வேலைகள் செய்து முடித்து களைப்பாக இரவு உறங்கலாம் என்று உறங்க சென்றால் உடனே தூக்கம் வருவதில்லை மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடும் இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் என எல்லாவற்றை பற்றியும் மனம் குழப்பிக்கொண்டு இருக்கும்.
அப்படி இருக்க இரவு நல்ல தூக்கம் கொண்டு காலை எழும்பொழுது அன்றைய இரவு கனவுகள் ஏதேனும் கண்டால், அதாவது வந்த கனவு நல்ல விதமாக இருந்தால் மனம் பெரிதும் பொருட்படுத்தாது.
ஆனால் கெட்ட கனவு இல்லை குழப்பமான கனவுகள் வந்தால் மறுநாள் முழுவதும் அந்த கனவை நினைத்து மனம் வருந்தி கொண்டு பிறரிடம் அந்த கனவை பற்றியான சந்தேகம் கேட்டுக்கொண்டு இருப்போம்.
அப்படியாக, நமக்கு கனவு வந்தால் பிறரிடம் சொல்லலாமா இல்லை என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு மனிதன் ஆழந்த தூக்கத்திற்கு செல்லும் பொழுது தான் கனவுகள் வரும். அதுவும் அந்த கனவுகள் அவன் சிந்தனையின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம்.
சிலருக்கு கனவில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் வருவார்கள், சிலருக்கு கடவுள் வரலாம், சிலருக்கு பேய் பிசாசுகள் விலங்குகள், இல்லை யாரோ அவர்கள் துரத்துவது போல் பல வகையாகன கனவுகள் வரும், இது எல்லாம் உண்மையில் நம் மனதின் பிரதிபலிப்பே.
அப்படி நமக்கு வரும் கனவு அது நல்ல கனவாக இருந்தால் பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் பிறரிடம் சொல்ல அது பலிக்காமல் போக வாய்ப்புள்ளது.
அதே கெட்ட கனவுகள் கண்டாலும் அதை பிறரிடம் நாம் பகிரக்கூடாது, அது நம் மேல் இருக்கும் மதிப்பை குறைக்க செய்யும்.
மேலும் எந்த கனவாக இருந்தாலும் மனம் குழப்பம் கொண்டால் எதுவும் யோசிக்காமல் வீட்டிலோ இல்லை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தீபம் போட்டால் அந்த தீபத்தின் ஒளியில் மனம் அமைதி பெற்று மன குழப்பம் விலகும்.