வைகுண்டத்தில் இருந்து நேராக தங்கைக்கு சீர் கொண்டு வந்த பெருமாள்
இறைவன் இருக்கும் இடம் தான் கோயில்.அப்படியாக ஒவ்வொரு கோயில் எழுப்பியதற்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும்.அந்த வரலாறுகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்து இருக்கும்.அப்படியாக புரட்டாசி மாதம் என்றே பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம்.இந்த மாதத்தில் பெருமாளை நினைத்து வழிபட வாழ்க்கையில் உள்ள துன்பம் விலகும்.
மேலும் இந்த மாதத்தில் பலரும் விரதம் இருந்து தங்களுடைய வேண்டுதல்களை வைப்பார்கள்.அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் மிகவும் விசேஷமான அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோவில் அமைந்துள்ளது.அதை பற்றி பார்ப்போம்.
இக்கோயிலின் ஒரு மிக பெரிய சிறப்பு என்னெவன்றால் இங்கு இருக்கும் சுவாமி நேரடியாக வைகுண்டத்தில் இருந்து வந்து, வைகுண்டவாசர் என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை.
அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தங்கை பார்வதிக்காக திருமணச்சீர் கொண்டு வந்த வைகுண்டவாசர் கோவில் கொண்டிருக்கிறார். சீதனத்துடன் வந்த சீனிவாசரான இவரை தரிச்சித்தால் பணத்தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது தலத்தின் ஐதீகம்.
ஒரு சமயம் அம்பிகை அம்பிகை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடவே உலகம் இருள் சூழ்ந்தது.இதனால் அம்பிகை மீது மிகுந்த சினம் கொண்ட சிவபெருமான்,அம்பிகையை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார். பூலோகம் வந்த அம்பிகை மானிடப்பெண்ணாக சிவன் மீது மிகுந்த அன்பும் பக்தி கொண்டு சிவன் தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் தவத்தில் ஆழ்ந்து வாழ்ந்து கொண்டு வந்தார்.
தனது தங்கை பார்வதிக்காக வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணுவும் சீர் கொண்டு வந்தார். அச்சமயத்தில் அசுரகுருவான சுக்ரச்சாரியரும் சிவனை வேண்டி பூலோகத்தில் தவமிருந்து வந்தார்.தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார்.
அம்பிகையும்,சுக்ராச்சாரியாரும் தவம் புர்ந்து கொண்டிருந்த இடம் இன்றைய மாங்காடு (சென்னை) என சொல்லப்படுகிறது. சுக்ராச்சாரியருக்கு வரமருளிய சிவன், அம்பிகைக்கும் காட்சி தந்து, காஞ்சிபுரத்தில் மணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.
அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தவ வாழ்க்கையைத் தொடர்ந்தாள் பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த சமயத்தில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்ததைக் கூறினார்.
புண்ணியதலமான மாங்காட்டில் தங்கும்படி கேட்டுக் கொள்ள பெருமாளும் வைகுண்டவாசர் என்னும் திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளினார்.
நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்கள் மேலும் தீராத பண கஷ்டம் இருப்பவர்கள் இத்தல பெருமாளை வந்து வழிபட நிச்சயம் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்கு தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |