நினைத்த காரியம் நிறைவேற்றும் தேய்பிறை சஷ்டி விரதம்
பெரும்பாலான இந்துக்களின் இஷ்ட தெய்வமாகவே விளங்குபவர் முருகர் என்றே சொல்லலாம்.உண்மையில் அவரை மனதார நினைத்து ஏதேனும் வேண்டுதல் வைக்க நிச்சயம் அது நடத்தி காட்டுவர் முருகர் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
அப்படியாக தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். இந்த தேய்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளும் ஒருவர் சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிப்பது என்று பார்ப்போம்.
இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் நம்மால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்ல சுபம் ஏற்படும்.
மேலும், வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முருகனுக்கு உகந்த மலர்களை சாற்றி, ஆறு விளக்குகளை கிழக்கு நோக்கி இருக்குமாறு ஏற்றி, பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம். இவ்வாறு ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களை தரும்.
பின்னர் முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு நைவேத்திய பொருளை படைக்கலாம். அதாவது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்று செய்யலாம்.
இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் இஷ்டமான ஒரு பழம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. வீட்டிலேயே முருகனின் பாடல்களை படிக்கலாம் குறிப்பாக கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்க வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகுவதோடு நம் மனதிற்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
இந்த சஷ்டி விரதம் இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் நம் வாழ்க்கையில் நடக்கிறது. நீண்ட நாள் திருமணம் தள்ளி போகும் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம்,பிள்ளைகள் படிப்பில் நல்ல தேர்ச்சி ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றி,பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி,எதிரிகள் தொல்லை இல்லாமல் போகுதல் போன்ற பல சிறப்புக்கள் இந்த சஷ்டி விரதம் இருப்பதால் முருகன் நமக்கு அருள்கிறார்.
ஆக விரதம் இருக்க முடித்தால் கட்டாயம் விரதம் இருந்தும்,விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் முருக பெருமானை மனதாரநினைத்தும் வழிபட வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |