கண் திருஷ்டி விலக வீட்டில் இந்த செடி வளருங்கள்

By Sakthi Raj Sep 22, 2024 11:30 AM GMT
Report

கண் திருஷ்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்று.எப்பொழுது இந்த கண் திருஷ்டி ஏற்படும்,யாரால் உண்டாகும் என்பதெல்லாம் நாம் அறியமுடியாது.இது நம்மை ஒவ்வொருவர்பார்க்கும் பார்வை பொறுத்தும் அவர்கள் எண்ணலைகள் பொறுத்தும் அமைவது.

 அப்படியாக கண் திருஷ்டி என்பது நமக்கு தீராத சங்கடத்தை உருவாக்கி கொடுத்து விடும்.அதாவது உடல் நலம் சரி இல்லாமல் போகுதல் போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த கண் திருஷ்டியால் ஏற்பட்டு விடும்.அப்படியாக இந்த கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாக்க வீட்டில் எளிய முறையில் செய்யும் பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

இதற்கு வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைக்க வேண்டும்.வீட்டுக்கு வருகை தரும் விருந்தனர் பார்வை அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும்.

கண் திருஷ்டி விலக வீட்டில் இந்த செடி வளருங்கள் | Kan Thirshti Parigarangal

மேலும்,தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் அதிகம் உண்டு. எனவே வீட்டின் முன் தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம் அல்லது பூச்செடிகள் வைக்கலாம். வீட்டின் வாசல் முன் பூசணிக்காயை கட்டித் தொங்க விடலாம்.

திருமண தடை விலக மருதாணி இலை பரிகாரம்

திருமண தடை விலக மருதாணி இலை பரிகாரம்


வீட்டு வாசலில் கண் திருஷ்டிவிநாயகரை மாட்டி வைக்கலாம் அல்லது கற்றாழையைக் கட்டித் தொங்க விடலாம். ஒருவர் மேல் உள்ள கண் திருஷ்டிபோக கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடலாம்.

கண் திருஷ்டி விலக வீட்டில் இந்த செடி வளருங்கள் | Kan Thirshti Parigarangal 

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டிதுணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி, மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்.

குடும்பத்தில் உள்ளவரின் கண் திருஷ்டிபோக தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும்.

மேலும்,வீட்டில் குடும்பங்களோடு சேர்ந்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தாலும் கண் திருஷ்டி விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US