கோலாகலமாக நடந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20ஆம் திகதி வரை நடக்கிறது.
நாள்தோறும் வரதராஜ பெருமாள் காலை, மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார்.
இந்நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |