கந்த சஷ்டி விரதம்: திருமண தோஷம் விலக பாராயணம் செய்ய வேண்டிய திருப்புகழ்
உலகம் எங்கிலும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் அதிகம். மேலும், அவரை கலியுக வரதன் என்று போற்றி வழிபாடு செய்கின்றோம். அதாவது ஒருமுறை "முருகா" என்ற திருநாமதத்தை நம்பிக்கையுடன் சொல்லி வழிபாடு செய்ய நம்முடைய துயரத்தில் உடன் நின்று அவர் நம்மை காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில், மகா கந்த சஷ்டி விரதம் முருகப்பெருமான் விரதங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படியாக, இந்த விரதத்தை பலரும் இறை அருளைப் பெறவும், அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறவும் கடைப்பிடிப்பது வழக்கம்.
அந்த வகையில், நீண்ட நாட்கள் திருமண வரன் அமையவில்லை, திருமண தோஷம் இருக்கிறது என்று கவலை கொள்ளாமல் மகா கந்த சஷ்டி விரத தினத்தன்று முருகப்பெருமானை மனதில் நினைத்து இந்த திருப்புகழை பாராயணம் செய்ய உங்களுக்கு நினைத்தது போல் திருமண வரன் அமையும் என்பது நம்பிக்கை.

திருப்புகழ்:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே .
இந்த திருப்புகழை நீங்கள் ஒரு முறை முழு மனதார முருகப்பெருமான் திருவுருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தினமும் பாராயணம் செய்ய திருமண தோஷம் விலகி குழந்தை பாக்கியம் மற்றும் வாழ்க்கையில் தடைகள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |