கண்டகசனியால் ஏற்படும் கஷ்டம் விலக செய்யவேண்டிய 5 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்
ஜோதிடத்தில் சனிபகவான் அவருடைய ஜென்ம ராசிக்கு 4 ,7 ,10 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது அந்த காலத்தை அந்த ராசியினருக்கு கண்டக சனி இருக்கக்கூடிய காலம் என்று அழைக்கிறார்கள்.
இந்த கண்டக சனி என்பது ஏழரை சனி, ஜென்ம சனி போன்றது தான். ஆக இந்த கண்டக சனி காலங்களில் நிச்சயம் நிறைய துன்பங்கள் சந்திக்கவேண்டிய நிலை வரும். அந்த நேரத்தில் மனம் துவண்டு போகாமல் ஒரு சில பரிகாரங்களை மனதார செய்து விட்டால் நிச்சயம் அந்த நபருக்கு நல்ல காலம் பிறக்கும். அதைப் பற்றி பார்ப்போம்.

1. சனிக்கிழமை தோறும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நல்லெண்ணெய் மற்றும் சிறிது கருப்பு எள் கலந்து தெற்கு முகமாக ஒரு அகல் தீப விளக்கு ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்பொழுது அவர்கள் மனதில் தங்களுடைய கர்ம வினைகள் யாவும் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு சனி பகவானை மனதார வழிபாடு செய்தால்நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
2. அதைப்போல் உப்பு எள் மற்றும் நாணயம் ஆகிய மூன்றையும் ஒரு சிறிய துணிப்பையில் வைத்து தலையணைக்கு கீழ் வைத்து உறங்கவும். பிறகு அதை மறுநாள் காலையில் எழுந்து மண்ணில் புதைத்து விட வேண்டும். இதனால் கண்டகச்சனியால் ஏற்படுகின்ற பயம் தடைகள் அவமானம் யாவும் விலகும்.
3. உங்களை விட வயது அதிகமான மூத்தவரிடம் அவர்களுடைய கால் பாதங்களை தொடாமல் அவர்களுடைய ஆசிர்வாதத்தை நீங்கள் பெற வேண்டும். அதோடு எள் கருப்பு நிற ஆடையை தானம் செய்தால் நிச்சயம் சனி பகவானால் நம்முடைய வாழ்க்கை பாதை நல்ல விதமாக மாறும்.
4. கண்டக சனி காலங்களில் அதிகாலை 5. 30 மணி முதல் 6.00 மணிக்குள் கண்களை மூடி “ஓம் ஷம் ஷனிச்சராய நம": என்கின்ற மந்திரத்தை மனதிற்குள் 11 முறை பாராயணம் செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை ஒலி இல்லாத அளவிற்கு மனதிற்குள் மட்டுமே நாம் சொல்ல வேண்டும்.
5. அதேபோல் கண்டக சனி காலங்களில் நீங்கள் தவறுதலாக கூட பொய் சத்தியம் செய்யக்கூடாது, முதியவர்களை அலட்சியம் செய்தல், உப்பு மற்றும் எண்ணெய் வீணாக்குதல் போன்ற எந்த ஒரு காரியங்களும் செய்யாமல் இருப்பதும் ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த பரிகாரமே ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |