வாஸ்து: மறந்தும் கூட இந்த 3 பொருட்களை படுக்கையறையில் வைக்காதீர்கள்
வாஸ்து ரீதியாக நமக்கு நிறைய குறிப்புகள் நம் வீடுகளில் கடை பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காரணம், சரியான பொருட்களை சரியான இடங்களில் வைக்காத பொழுது நம்முடைய மனநிலையில் நம்மை அறியாமல் சில மாற்றங்களை காணக்கூடிய நிலை வந்துவிடும்.
அதனால், தான் வாஸ்துவில் அந்தந்த பொருட்களை அதற்கான உ ரிய இடங்களில் வைக்க வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகிறார்கள். அந்த வகையில் வாஸ்து ரீதியாக நாம் படுக்கையறையில் ஒரு சில பொருட்களை மறந்தும் கூட சில பொருட்களை படுக்கைறையில் வைத்து விடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. கடவுள் சிலை:
நாம் எப்பொழுதும் கடவுள் சிலையை பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். அதைத் தவிர்த்து நாம் படுக்கையறையில் இறைவனுடைய சிலையை வைக்கும் பொழுது உங்களை அறியாமல் உங்கள் மனதில் ஒருவித பயம் பதட்டம் உண்டாகும்.
இந்த பதட்டமானது கணவன் மனைவி இடையே மனக்கசப்புகளை உண்டு செய்து விடும். அதனால் படுக்கையறையில் நம்முடைய மனதிற்கு அமைதி தரக்கூடிய மகிழ்ச்சியை தூண்டக்கூடிய சிலைகளை வாங்கி வைப்பது நல்லது.
2.தானியங்கள் :
வீடுகளில் சில பொருட்களை வைப்பதற்கு இடமில்லாமல் படுக்கை அறைக்கு அதை எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். அதில் முக்கியமான ஒன்று உணவுப் பொருட்களான தானியங்களை படுக்கையறையில் சேமித்து வைப்பது. இவ்வாறு வைக்கும் பொழுது அவை தாம்பத்திய உறவில் மிகப்பெரிய விரிசலையும் சிக்கலையும் கொடுத்து விடுகிறது.
அது மட்டுமல்லாமல் தானியத்தை நாம் படுக்கையறையில் சேமித்து வைக்கின்ற பொழுது காலங்கள் கடக்க அதில் பூச்சி உருவாகி கிருமிகளால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை கொடுக்ககூடும். அதனால் அவ்வாறு வைக்கும் பொழுது சரியான இடத்தை வீடுகளில் தேர்வு செய்து வைப்பது அவசியமாகும்.

3. கண்ணாடி:
படுக்கை அறையில் கட்டாயம் முகம் பார்க்கும் கண்ணாடி வைக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் அந்த கண்ணாடியை படுக்கையறையில் வைக்கும் பொழுது அது எந்த இடத்தில் வைகின்றோம் என்பது பொறுத்துதான் நமக்கு எதிர்மறை தாக்கத்தின் பாதிப்புகள் வருகிறது.
அதாவது நம்முடைய படுக்கையை பிரதிபலிக்கும் வகையில் அந்த கண்ணாடி அமைய பெற்றிருக்கக் கூடாது. அவ்வாறு வைக்கின்ற பொழுது மன அழுத்தம் மன நிம்மதி இல்லாத ஒரு நிலை உண்டு செய்து விடும்.
ஆக, வாஸ்து என்பதே சரியான பொருட்களை சரியான இடங்களில் வைப்பதே ஆகும். அதை நாம் பின்பற்றி விட்டாலே நிச்சயம் நம் வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் குழப்பங்கள் இவை எல்லாம் விலகுவதை காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |