மகாபாரதத்தில் கண்ணன் கண் கலங்கி நின்ற இடம் எது தெரியுமா?

By Sakthi Raj Jul 19, 2024 08:30 AM GMT
Report

மனிதனுக்கு அவன் செய்யும் செயல் தான் அவனுக்கு நன்மையை தேடி தரும்.ஒரு மனிதனின் செயல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் மாற்ற முடியும்.

அப்படியாக ஒரு முறை அர்ஜுனனுக்கு கண்ணன் உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று கீதோபதேசம் செய்தார்.

ஆனால் அவரையே கண்ணீர் கடலில் ஆழ்த்திய இடம் ஒன்று இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

மஹாபாரத போரில் கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த வேளையில் அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான் .

மகாபாரதத்தில் கண்ணன் கண் கலங்கி நின்ற இடம் எது தெரியுமா? | Kannan Alutha Idam Mahabaratham Karnan War Worship

கண்ணனுக்கே தாங்கவில்லை.ஆதலால் கண்ணன் கர்ணனிடம் "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றார் அப்போதும் கர்ணன் கண்ணா எனக்கு "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம்.

அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் கொடு " என்று வேண்டினான் கர்ணன். அந்த பதிலை கர்ணனிடம் கேட்ட கண்ணன் , அழுதே விட்டார்.

இப்படி ஒரு நல்லவனா என்று தாங்க முடியவில்லை. கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டார் கண்ணன்.

உலகில் உண்மையான மகிழ்ச்சி எது?

உலகில் உண்மையான மகிழ்ச்சி எது?

 

கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான். கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்.

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் கர்ணா "நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தார்.

மகாபாரதத்தில் கண்ணன் கண் கலங்கி நின்ற இடம் எது தெரியுமா? | Kannan Alutha Idam Mahabaratham Karnan War Worship

இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எத்தனையோ தேடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கர்ணன் இறைவனைக் காண வேண்டும் என்று எந்த தவமும் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று மெனக்கெட வில்லை.

கர்ணனின் நல்ல செயலால் இறைவன் அவனைத் தேடி வந்தார். கேட்காதபோதே விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்,கண்ணீர் விட்டார்.

செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தார். இறைவனைத் தேட வேண்டாம். அவர் நாம் இருக்கும் இடம் தேடி வருவார்.

கேட்காதது எல்லாம் தருவார். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வார். அதற்கு என்ன செய்ய வேண்டும்? கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான்.

எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.

உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார். ஈகை எவ்வளவு பெரிய நற்செயல் !

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US