கந்த சஷ்டி நாளில் நாம் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்

By Sakthi Raj Nov 07, 2024 10:05 AM GMT
Report

நிரந்திரம் இல்லாத வாழ்க்கையில் இறைவன் மட்டுமே நம்முடைய முழு நம்பிக்கை.அப்படியாக நம்முடைய வாழ்க்கையின் மிக பெரிய நம்பிக்கையாக முருக பெருமானாக இருந்து வருகிறார்.உலகத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கக்கூடியதாக இருந்தாலும் சில பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.

அப்பொழுது செய்வதறியாது நிற்கும் நாம் நம்பி நம்முடைய தடங்கல் முடிச்சுகளை அவிழ்க்க முருகனை மனதார வணங்கி வழிபாடு செய்வது உண்டு.அதில் ஒரு முக்கியமான வழிபாடாக கந்த சஷ்டி வழிபாடு பார்க்க படுகிறது.

இந்த நாளில் பலரும் தங்கள் வாழ்க்கையில் விடை கிடைக்காத பல பிரச்சனைகளுக்கு நல்லதோர் விடை கேட்டு முருகனுக்காக விரதம் மேற்கொண்டு இப்பொழுது அந்த கந்த சஷ்டி 6 ஆம் நாள் இறுதி நாள் வந்துவிட்டது.அன்றைய தினத்தில் நாம் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமான் மந்திரம் சொல்ல நம்முடைய வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை விலகி வாழ்க்கையை மேம்படுத்தும்.

கந்த சஷ்டி நாளில் நாம் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் | Kantha Sashti Nallil Solla Vendiya Manthiram

முருகன் துதி 

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் 
கடம்பின்மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் 
மா மயிலோன்வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் 
அவன்கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே

இந்த பாடலை பாடி தினமும் நெற்றியில் முருகனை நினைத்து திருநீறு அணிந்து வந்தால் எப்படிப்பட்ட மோசமான தலையெழுத்தும் மாறும்

கந்த சஷ்டி கடைசி நாள் விரதம் முடிக்கும் முறை

கந்த சஷ்டி கடைசி நாள் விரதம் முடிக்கும் முறை

பொருள்

மயில் மீது ஏறி வரும் முருகனின் வேல் பட்டு சூரன் அழிந்தான். அது போது என்னுடைய தலை மீது உன்னுடைய பாதங்களை வைத்து, அயனாகிய பிரம்மன் மோசமாக எழுதி இருக்கும் என்னுடைய தலையெழுத்தை அழித்து விடு. என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, வளமான வாழ்க்கை அமைய எனக்கு அருள் செய் முருகா என வேண்டிக் கொள்வதே இந்த பாடலின் பொருளாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US