கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
முருகப் பெருமானுக்கு மிக உகந்த மற்றும் பிடித்த விரதம் என்றால் அது கந்த சஷ்டி விரதம் தான், இன்று சித்திரை வளர்பிறையில் கந்த சஷ்டி விரதம் வந்திருக்கிறது.
இந்த பதிவில் இன்றைய நாளில் விரதம் இருப்பது எப்படி? என்னென்ன பலன்கள்? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
விரதம் இருப்பது எப்படி?
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தமான பின்னர் முருகப்பெருமானை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
பூஜை அறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் இருக்கும் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
இனிப்பு சார்ந்த நைவேத்தியம் செய்து முருகனுக்கு படையல் இட்டு, காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் கந்த சஷ்டி கவசம் பாடினால் முருகனின் அருள் கிடைக்கும்.
உங்களால் இயன்றால் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்கலாம். குழந்தை பேறு கிடைக்க கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது சிறந்தது, இந்நாளில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பது நம்பிக்கை.