கந்த சஷ்டி விரதம் இருந்த முழு பயனை அடைய நாம் செய்யவேண்டியவை
முருக பெருமான் விரதங்களில் மிக முக்கியமான விரதங்களாக இந்த கந்த சஷ்டி விரதம் இருக்கிறது.இந்த விரதம் தொடர்ந்து 6 நாட்கள் அனுஷ்டிக்க படுகின்ற விரதம் ஆகும்.திருமணம் வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் இந்த விரதம் பலரும் மேற்கொள்வார்கள்.
அப்படியாக சிலருக்கு இந்த விரதம் இருக்கும் வாய்ப்புகள் பல சூழ்நிலையால் கிடைப்பதில்லை.அவர்கள் இந்த கந்த சஷ்டி விரதம் இருந்த பலனை பெற செய்யவேண்டியவை பற்றி பார்ப்போம். இறைவனை நினைத்தாலே நம்முடைய கவலைகள் தீரும்.
அதிலும் அவனை நினைத்து விரதம் இருந்தால் நம்முடைய உடலும் மனமும் சுத்தமாகும்.அப்படியாக பெரும்பாலான மக்கள் தங்களுடைய தீராத கஷ்டம் தீர இறைவனை மனதார நினைத்து விரதம் மேற்கொள்வார்கள்.அப்படியாக கந்த சஷ்டி விரதத்தின் முக்கியமான ஒன்று கந்த சஷ்டி கவசம்.
விரதம் இருக்க இயலவில்லை என்றாலும் கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் அன்று ஒரு முறையும், இரண்டாவது நாள் அன்று இரண்டு முறையும், மூன்றாவது நாள் அன்று மூன்று முறை என்று ஆறாவது நாள் ஆறு முறை என்ற வீதத்தில் தொடர்ச்சியாக தினமும் படித்து வர முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
அதோடு மட்டும் அல்லாமல் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயம் அல்லது தங்களுக்கு பிடித்த முருகன் ஆலயம் சென்று நம்மால் இயன்ற அளவு உழவாரப்பணி மேற்கொள்வதன் மூலமும் முருகப்பெருமானின் அருளை பெற முடியும்.
அதே சமயம் முருகப்பெருமானுக்கு இந்த ஆறு நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது நம்மால் இயன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கி தருவதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.மேலும் முடிந்தவர்கள் முருகன் ஆலயத்தில் அன்னதானம் செய்வதும், முருகன் பக்தர்களுக்கு பச்சை நிற ஆடை தானம் செய்வதும் சிறப்பு கூறியதாகும்.
முருகன் என்றாலே வேல் தான் முருகன் கோவிலில் வேல் வாங்கி தானம் தருவதும் முருகன் சிலையை வாங்கி வறுமையில் இருப்பவர்களுக்கு பூஜை செய்வதற்காக தானம் தருவதும் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வதற்குரிய முழுமையான பலனை பெற உதவும் என்று கூறப்படுகிறது.
ஆக விரதம் இருக்க முடியவில்லை என்று வருத்தம் அடையாமல் நம்மால் இயன்ற முறையில் நாம் முருகனுக்கு அர்ப்பணிக்க நம்முடைய வாழ்வு சிறப்பாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |