வினைபதிவை எப்படி அழிப்பது

By வாலறிவன் Jul 15, 2024 05:30 AM GMT
Report

எந்த ஒரு செயலுக்கும் விளைவு கட்டாயம் உண்டு என்பது பிரபஞ்ச நியதி எனும் போது நாம் நமது சொத்தாக ஏற்று வந்த வினை பதிவுகளை எப்படி நீக்குவது என இந்த பதிவில் பார்ப்போம்.

வினை என்றால் நிறைய பேருக்கு புரிவதில்லை., கர்மா என்றால் புரியும் கர்மா என்றதும் சஞ்சித கர்மம், பிராரப்த் கர்மம், ஆகாமிய கர்மம், என அணைத்து ஆன்மிக வாதிகளும், ஜோதிடர்களும் பேசுவதெல்லாம் நியாபகம் வருகிறதா?

வினைபதிவை எப்படி அழிப்பது | Karma Vinaigal Palan Thuirumoolar Manthiram

கடவுளும் கர்மாவும் கண்ணுக்கு தெரியாததால் அது அவரவர் வசதிக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைவு கொள்வோமாக, சரி கர்மவை கரைக்க முடியுமா என்றால் முடியும் என்பது பதில், விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் இந்த பழமொழி ஆழமான ஒரு உண்மையை கூறுகிறது.

மதி என இதில் குறிப்பிடப்படுவது என்ன? மதி என்றால் அறிவு என்று பொருள், இப்பொது அறிவு என்றால் என்ன என்ற புரிதலை கொடுக்க வேண்டியுள்ளது நீங்கள் நினைக்கும் அறிவு என்பது என்ன? உங்கள் படிப்பா? அது வெறும் தகவல் மட்டும் தான், அதாவது Data அதை இணையமே ( Google ) உங்களை விட அதிகமாக கொடுத்து விடும் எனும் போது அறிவு என்பது என்ன? வழக்கம் போல் ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. என அறிவை பல சித்தர்கள் ஞனிகள் மகான்கள் கூறியுள்ளனார்.

இன்றைய ராசி பலன் (15.07.2024)

இன்றைய ராசி பலன் (15.07.2024)

 

ஆனாலும் நாம் தெளிவாக விலங்கிக்கொள்ள வில்லை கடலை உதாரணமாக கொண்டு புரிதலுக்கு முயற்சிக்கலாம் மனம் என்பது கடல் அலையானால் அலையை கடந்து நாம் செல்ல நிலையான சலனமாற்ற நீரை காண முடியும்.

அந்த நிலையான நிலை தான் அறிவு நீங்கள் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உங்கள் மூளைக்கு கட்டளை இடுவதில் இருந்து உங்களின் கர்ம பதிவுகளை செயலாக்கம் செய்வது வரையில் அனைத்து அற்புதங்களுக்கும் அதாரமாய் அமைவது இந்த அறிவு தான்.

இதை புத்தி, கவனம், சித்தம் என்ன பல பெயர்களில் வழங்கியுள்ளனர். நாம் மனதில் எவ்வளவு எண்ணங்கள் வருகின்றது இவையெல்லாம் எக்கிருந்தது வருகின்றது என்ன சிந்தித்தால் புரியும்.

வினைபதிவை எப்படி அழிப்பது | Karma Vinaigal Palan Thuirumoolar Manthiram

மூலை என்பது புலன் மட்டுமே அது எழும் எண்ணங்களை விரித்தும் புதிய எண்ணங்களை பதியவைத்தும் பணியாற்றும் ஒரு கருவி மட்டும் தான் மனதில் எழும் எண்ணங்கள் கடந்து, எண்ணங்கள் எழும் இடத்தில் கவனம் செலுத்த ஒரு கடடத்தில் விழிப்புணர்வு ஏற்படும்.

அப்போது தான் நாம் அறிவை உணர முடியும் இதற்காக தான் தியானம், தவம் எல்லாம் செய்கின்றார்கள்.   அறிவில் நிலைத்து நிற்க நிற்க நம் வினை பதிவுகளை மேல் கவனம் செலுத்தும் பக்குவம் கிடைக்கும்.

பின் தொடர்ந்த பயிற்சி மற்றும் முயற்சியால் உங்கள் கர்ம பதிவுகள் அனைத்தும் படிப்படியாக கரையும் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்.

 பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே எனும் திருமுலர் பாடலை திரும்ப திரும்ப படியுங்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே என்றால் புருவ மத்தியில் அறிவை நிலைக்க செய்து பழகுவதை குறிக்கும்.

 எனவே இறுதியாய் கர்மாவை கழிக்க முதலில் தவம் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளவேண்டுகிறேன்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US