கர்ம வினைகள் நீங்க என்ன செய்வது?
Report this article
நாம் செய்யும் பாவங்கள், நம்மை பின் தொடர்ந்து அதற்கான பலனும் பாடமும் கற்று கொடுப்பதின் பெயர் தான் கர்மா.
இப்படியாக தெளிவு ஞானம் என்பது ஓர் மனிதன் இடத்தில உடனே வருவதில்லை.
அவன் பிறந்த உடன் இல்லை வளரும் வேளையில் அவன் எந்த அளவிற்கு முனைப்போடு இருந்து ஆன்மீக ரீதியாக உண்மையின் பக்கம் நின்று தர்மம் கற்று கொள்கிறானோ அப்பொழுது சிந்தை தெளிவடையும்.
சிந்தை தெளிவடைந்தவன் பேசும் ஒரே மொழி மௌனம்.
அப்படியாக அவன் ஆழ்ந்த ஆன்மீகத்தில் சென்று சிந்தையை தெளிவடைய செய்து இந்த உலகில் வாழ்தலே இறப்பதற்காகத்தான்.
இடையில் ஏன் இத்தனை ஆட்டங்கள்,வாழ வந்த நம்மை போல் மனிதர்கள் சக உயிர்கள் அவர்களிடம் புன்னகைத்து அன்பு பரிமாற்றம் செய்து பகவானை சரண் அடைவோம் என்று இருப்பார்கள்.
"தான் "என்ற கர்வம் இருக்காது. ஈ ,புழு ,பறவை ,விலங்கு, மனிதர்கள் எல்லாம் ஓர் உயிர் நம்மை போன்றே, உருவத்திலும் அறிவிலும் மட்டும் தான் மாற்றம் என்று என உணர்ந்து வாழ்வார்கள் .
அப்படியாக சக உயிர்களின் மனதையும் கர்ம வினைகளின் புரிதலும் இல்லாமல் சிலர் பிறருக்கு பாவம் இழைத்து விடுகிறார்கள்.
அப்படி பாவம் செய்து விட்டு எத்தனை நாட்கள் அவர்கள் அதை உணராமல் வாழ முடியும். ஒரு நாள் இறைவன் அங்கு வந்து நிற்பான் பாடம் கற்பித்து கொடுக்க.செய்த பாவங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் துன்பங்கள் எதனால் என்று அறியாமல் இறுதியில் துன்பம் முற்றி போக அப்பொழுது உணருவார்கள்.
அன்று நான் அறியாமல் செய்தேனே இன்று துன்பம் அடைகின்றேன் என்று. அவர்கள் அழுது புரண்டு பிறகு அவர்கள் வாயில் வருவது பகவானே நான் என்ன செய்வேன் இதற்கு தீர்வு உண்டோ? தவறை உணர்தேன் என்று அவனிடம் சரண் அடைவதே கர்ம வினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.
அதற்காக தெரிந்தே தவறு செய்து இறைவனை சரண் அடைந்தால் இறைவன் ஏற்று கொள்ளமாட்டான். அப்படியாக செய்த பாவம் உணர அவனை நித்தம் வழிபட்டு வர ஆன்மா மேன்மை அடையும்.கர்மவினைகள் நம்மை விட்டு அகலும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |