வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க கிருஷ்ணரின் சங்கு வழிபாடு
ராமர் இருக்குமிடம் அயோத்தி என்பது போல, மகா விஷ்ணு இருக்குமிடம் சாளக்கிராமங்கல். மேலும் கிருஷ்ணரின் வலம்புரி சங்கு ஐஸ்வர்ய லட்சுமி அம்சமாக கருதப்படுகிறது.
பொதுவாக கிருஷ்ணர் என்றால் அகிலத்தை காப்பவன்.தர்மத்தின் தலைவன் என்போம்.
அப்படி இருக்க கிருஷ்ணரின் சங்கிற்கு அத்தனை மகிமைகள் இருக்கிறது'
ஒருவர் வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் திருஷ்டி தோஷம் ஏற்படாது.நிலை வாசலில் கூட சங்கு சக்ரம் இருப்பது போலான டிசைன்கள் வைத்த போடலாம்.
மேலும் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தால் தீய சக்தி நீங்குவதோடு லட்சுமி தேவி சக்தி அதிகரிக்கும். சங்கு பூஜை செய்வதால் செல்வம் பெருகும்.
மேலும் தண்ணீரில் சங்கினை கழிவு சுத்தம் செய்து வாழை இலை அல்லது வெள்ளித்தட்டல் அரிசி பருப்பு அதன் மீது சங்கு வைக்க வேண்டும் சந்தனம் குங்குமம் மலர்களால் அலங்கரித்தபின் லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது 108 போற்றுகை சொல்லி வழிபட வேண்டும்.
இப்படி செய்ய வீட்டில் உள்ள தோஷங்கள் விலகி செல்வம் பெருகி அதிர்ஷ்டம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |