தமிழ் வருட பிறப்பு அன்று நாம் என்ன செய்ய வேண்டும்
தமிழ் வருடம் பிறக்கப் போகிறது. புது வருடம் பிறக்க அதோடு சேர்ந்து நாமும் பிறக்கின்றோம்.
எல்லாம் புதிதாக பிறக்கின்றது. ராசி பலன்கள் நட்சத்திர பலன்கள் எல்லாம் அனைத்தும் புதிதாக மாறி வாழ்க்கைக்கு ஒரு மாறுதல் நடக்க கூடிய ஒரு விஷயமாக தமிழ் புத்தாண்டு இருக்கிறது.
அப்படியாக தமிழ் புத்தாண்டு அன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக மாத பிறப்பு செவ்வாய், வெள்ளி என்றாலே வீடுகளை அலசி சுத்தம் செய்வது வழக்கமாக வைத்திருக்கிறோம்.
அதேபோல் வருட பிறப்பிற்கு முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு வீடுகளை சுத்தமாக அலசி, விளக்குகளை தேய்த்து சுத்தம் செய்து அவைகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு பின்பு, வீட்டு வாச நிலைகளுக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.
நாம் நிலை வாசலுக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து அதற்கும் பத்தி தீபங்கள் காண்பிக்க வேண்டும்.
ஏனென்றால் நிலைவாசல் என்பது வீட்டின் ராஜவாசல்.நிலை வாசல் தான் நம்மை காக்கும் வாசல் அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட தீய சக்திகள் அனைத்தும் நம் வீட்டும் வருவதற்கு அஞ்சும்.
சித்திரை மாத பிறப்பு அன்று காலையில் விளக்கேற்றி முதலி்ல் வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய அந்த வருடம் இனிதாக அமையும்.
சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் நீர், மோர், பருப்பு வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும்.
பிறகு இன்பம் துன்பம் எல்லாம் மனிதன் வாழ்க்கையில் இயல்பானது என்பதை உணர்த்தும் வகைகள் அறுசுவை உணவுகளை நாம் தயாரித்து உண்ண வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |