கார்த்திகை தீபம் 2024:வீட்டில் தீபம் ஏற்ற உகந்த நேரம் எது??
கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதம்.அந்த மாதத்தில் வரும் திருக்கார்த்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.பவுர்ணமி திதியும்,கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை தான் திருக்கார்த்திகை என்போம்.
கார்த்திகை தீபம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அண்ணாமலையார் கோயில் தான்.ஒவ்வொரு வருடம் திருக்கார்த்திகை நாள் அன்று திருவண்ணாமலை கோயிலில் மலை அடிவாரத்தில் பரணி தீபமும் மலை உச்சியில் அண்ணாமலையார் தீபமும் ஏற்றி வழிபாடு செய்யப்படும்.இதில் பல லட்ச பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விளக்கு ஏற்றும் நேரம்:
திருக்கார்த்திகை நாள் அன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றிய பிறகே நாம் வீடுகளில் தீபம் ஏற்ற தொடங்குவோம்.அதாவது அண்ணாமலையார் கோயிலில் மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்ற படும் அதனை தொடர்ந்து நாம் 6.05 நாம் வீடுகளில் தீபங்கள் ஏற்றவேண்டும்.
கார்த்திகை தீபத்திருநாளன்று அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு நல்லெண்ணெய் அல்லது பஞ்சு கூட்டு எண்ணெய்களை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஒரேயொரு நெய் விளக்கேற்றுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
மேலும் நாம் வீடுகளில் குறைந்த பட்சம் 27 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்.27 என்பது கணக்கு நாம் அதிக அளவிலும் வீடுகளில் விளக்குகளை ஏற்றலாம்.வீட்டு வாசலில் கோலத்தின் மீது தாம்பூலம் அல்லது மனை பலகை வைத்து ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது.
வாசலில் ஏற்றப்பட்ட தீபம் 30 நிமிடங்கள் எரிந்தால் கூட போதுமானது. பிறகு எடுத்து விடலாம்.தீபம் இவை நாம வாழ்க்கையில் உள்ள இருளை போக்கி ஒளி நிறைய செய்யும்.ஆக இந்த திருக்கார்த்திகை நாள் அன்று நாம் அனைவரது வீட்டிலும் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்து நம் வாழ்க்கையை வளம் ஆக்குவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |