கார்த்திகை தீபம் 2024:ட்ரெண்டாகும் ஆறுபடை அகல் விளக்கு
திருக்கார்த்திகை நெருங்கி விட்டது.அப்படியாக விளக்குகள் விற்பனையும் அதிக அளவில் விற்க தொடங்கிவிட்டது.ஒவ்வொரு வருடமும் வித்யாசமாக விளக்குகள் விற்பனைக்கு வருவதை நாம் பார்க்க முடியும்.அந்த வகையில் இந்த வருடம் ட்ரெண்டாகும் விளக்குகள் பற்றி பார்ப்போம்.
இந்த வருடம் ஆயிரம் கணக்கான வித்யாசமான விளக்குகள் செய்யப்பட்டு வ்ருகிறது.அதாவது 5 ஸ்டார், 7 ஸ்டார் அகல்விளக்குகள், ஒன் ஸ்டெப் அகல் விளக்குகள், 2 ஸ்டேப் அகல் விளக்கு, கலசத் டோர் அகல் விளக்கு, தாமரைப்பூ விளக்குகள், நெய் விளக்கு, வீடு டூம் அகல்விளக்கு, ஹாங்கிங் தூம் அகல் விளக்குகள், மாய விளக்குகள், யானை விளக்குகள், தட்டு விளக்குகள், தண்ணீர் ஊற்றிஎரியும் விளக்குகள், தேங்காய் அகல் விளக்கு, ஸ்டாண்ட் அகல் விளக்கு, சங்கு அகல் விளக்கு, குபேர விளக்கு, அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் ஆறுபடை அகல் விளக்கு, வாழைப்பட்டை அகல்விளக்கு, ஊரிலி அகல் விளக்கு, ஐந்து அடுக்கு அண்ணம் விளக்கு, அன்னப்பறவை சக்கரம் அகல் விளக்கு, மேஜிக் லேம்ப் போன்ற பல வகைகளிலும், பல வண்ணங்களில் அகல்விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.
வித்யாசமான விளக்குகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.விளக்கு நம்முடைய வீட்டை ஒளி நிறைய செய்து.நம் மனம் அமைதி பெற செய்யும்.வருடம் வருடம் கார்த்திகை தீபம் அடுத்து அகல் விளக்குகள் புது வகையில் மக்கள் மனதை கவர்கிறது.
மேலும் ஒரு ரூபாய் தொடங்கி பல ஆயிரம் ரூபாய் வரையிலும் விளக்குகள் விற்பனை ஆகுவதை பார்க்க முடிகிறது.அதிலும் இந்த வருடம் குறிப்பாக அகல்விளக்குகளில் முருகன் வேல் கொண்டு ஆறுபடை அகல் விளக்கு ட்ரெண்டாகி வருகிறது.அந்த விளக்குகள் மக்களை கவர்ந்து வாங்குவதில் கவனத்தை ஈர்த்து உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |