நாம் அனைவரும் வாழ்க்கை ஒளிமையாம் ஆகத்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்.ஒளி இதில் தான் இறைவன் இருக்கின்றான் மேலும் அந்த ஒளியால் தான் நம்மை வாழவைத்து கொண்டு இருக்கின்றான்.அப்படியாக கார்த்திகை மாதம் மிகவும் ஒளி நிறைந்த மாதம்.
மாதத்தில் தினமும் நாம் வீட்டு வாசலில் மண் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம்.மேலும் அந்த மாதத்தில் தான் மகாவிஷ்ணு தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும் மாதமாகும். அப்போது நம்முடைய வீடுகளில் விளக்கேற்றி மங்கலகரமாக வைத்திருந்தால் பெருமாளின் அனுகிரகமும், மகாலட்சுமியின் அனுகிரகமும் கிடைக்கும்.
அப்படியாக கார்த்திகை மாத பிறப்பில் முதல் நாள் நாம் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் தேதி நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அதுவும் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருவதால் கூடுதல் சிறப்பை பெறுகிறது.
இந்த வழிபாட்டை மேற்கொள்ள அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.மேலும் நீண்ட நாள் நாம் காத்திருந்து நடக்காத விஷயம் ஒன்றை மனதில் நினைத்துக்கொண்டு மூன்று அகல் விளக்கு எற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்ததாக நீண்ட நாள் நல்ல வரன் தேடும் பெண்களும் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளும் முருகன் சன்னிதியில் மூன்று அகல் விளக்கு ஏற்றி ஒன்பது முறை வளம் வந்து மனதார தங்கள் நினைத்தது நடக்கவேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
மேலும் திருமணம் தடையை சந்திக்கும் ஆகாத ஆண் இருந்தால் அது நீங்க, திருமணம் நடைபெற வேண்டிய பையன் அல்லது அவரது தாய் அல்லது தந்தை முருகன் கோவிலுக்கு சென்று, 5 அகல் விளக்கு ஏற்றி வைத்து, 9 சுற்று சுற்றி விட்டு வர வேண்டும்.
இவ்வாறு வழிபட நிச்சயம் முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் நல்லதோர் மற்றம் நிகழும்.வாழ்க்கை ஒளிமையமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |