கார்த்திகை தீபம் காற்றில் அணையாமல் இருக்க எளிய டிப்ஸ்

By Sakthi Raj Nov 29, 2024 12:30 PM GMT
Report

கார்த்திகை மாதம் ஆன்மீக சிறப்பு மிகுந்த மாதம்.அப்படியாக இந்த மாதத்தில் தான் நாம் அனைவரும் 30 நாளும் வீட்டில் நிலைவாசலில் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்வோம்.அதிலும் திருக்கார்த்திகை அன்று நாம் வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வைத்து பூஜைகள் செய்வோம்.

அன்றைய நாள் இன்னும் விஷேசமாக இருக்கும்.ஆனால் இதில் ஒரு சிக்கல் என்ன வென்றால் கார்த்திகை மாதம் மழை காற்று அதிகம் வீசும் மாதம்.அந்த வேளையில் நாம் வைத்த விளக்குகள் காற்றில் அணையும் பொழுது மனம் சற்று துன்புறும்.

நாம் இப்பொழுது தீபம் காற்றில் அணையாமல் இருக்க நாம் பின்பற்ற வேண்டிய எளிமையான குறிப்புகள் பற்றி பார்ப்போம். பொதுவாக நாம் திரிகளை கடைகளில் வாங்குவோம்.ஆனால் நாம் வீட்டிலேயே திரியை உருவாக்கலாம்.

கார்த்திகை தீபம் காற்றில் அணையாமல் இருக்க எளிய டிப்ஸ் | Karthigai Deepam Simple Tips

இதற்கு தேவையான அளவு பஞ்சை சிறிய துண்டுகளாக எடுத்துக் கொண்டு பிறகு மிக சிறிய அளவு பஞ்சை உருட்டி, அதனை சற்று பெரிய அளவு பஞ்சில் வைக்க வேண்டும். பின்னர், இதை திரி போல் சுற்றிக் கொள்ள வேண்டும்.

தொட்டது எல்லாம் வெற்றி தான்-சனியால் நன்மை பெற போகும் ராசிகள்

தொட்டது எல்லாம் வெற்றி தான்-சனியால் நன்மை பெற போகும் ராசிகள்

பிறகு காய்த்து ஆற வைத்த பாலில், சிறிய துண்டு கற்பூரத்தை உடைத்து போட்டு, அதனை தொட்டு திரிபோல் சுற்ற வேண்டும். பின்னர், இந்த பஞ்சுகளை சிறிய அளவு எண்ணெய்யில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு கார்த்திகை தீபம் ஏற்றும் பொழுது விளக்குகளை நன்றாக கழுவி காய வைத்து பின்னர் விளக்கு காய்ந்த பிறகு அதனை நன்றாக துடைத்து விளக்கில் சிறிய துண்டு கற்பூரம் போட்டால் விளக்கு அணையாமல் நீண்ட நேரத்திற்கு எரியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US