கார்த்திகை சஷ்டி விரதம் - செல்வம் பெருக முருகனை இப்படி வழிபடுங்க
கார்த்திகை மாத சஷ்டி மிக உன்னதமான நல்லநாள்.
கார்த்திகை சஷ்டி
கார்த்திகை என்பதே முருகப் பெருமானைக் குறிக்கும் மாதமாகும். இதனால் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் முருகனுக்கு மாலை அணிந்து, நடைப்பயணமும் மேற்கொள்கின்றனர். இன்று கார்த்திகை மாத சஷ்டி நாள்.

இந்த நாளில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலில் சென்று அங்கேயே தங்கி இருப்பது வழக்கம்.
விரத முறை
அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் நீராடி விரதத்தை மேற்கொள்ளலாம். குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது. விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும்.
முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. அத்துடன் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம்.
குழந்தை வரம், நல்ல வேலை, வியாபாரம் செழிக்க, நல்ல வரன் அமைய, ஆரோக்கியம் கிடைக்க வேண்டி இந்த விரதம் இருக்கலாம். நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், அனைத்து வகை செல்வங்களையும் நமக்கு அருளச் செய்வார் என்பது ஐதீகம்.