நேர்மறை ஆற்றல் பெருக கார்த்திகை செவ்வாய்கிழமை தீப வழிபாடு
ஒரு மனிதன் அனுபவிக்க கூடாத துயரங்களில் மிக முக்கியமான ஒன்று கடன் வாங்குவது.கடன் வாங்கிவிட்டால் நம்முடைய நிம்மதியை நாம் இழந்து விடக்கூடும்.அப்படியாக வாங்கிய கடன் சீக்கிரமாக அடைக்கவும் மீண்டும் கடன் வாங்காமல் இருப்பதற்கும் நாம் கட்டுப்பாடாக இருந்தாலும் சில நேரம்,கால சூழ்நிலை நம்மை விடுவதில்லை.
அப்படியாக நாம் இப்பொழுது அதிக கடன் பிரச்சனையில் மாட்டி கொண்டு இருக்கும் வேளையில் நாம் செய்யவேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம். தமிழ் மாதங்களில் மிகவும் விஷேசமான ஒளி நிறைந்த மாதமாக கார்த்திகை மாதம் திகழ்கிறது.
ஆக நாம் இந்த மாதத்தில் எந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் கட்டாயம் அதில் தீபம் இடம்பெற்று இருக்கும்.மேலும்,இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய எல்லா நாட்களும் சிறந்த நாட்களாக இருந்தாலும் இந்த மாதத்தில் வரும் செவ்வாய் கிழமை மிகுந்த விஷேசமாக கருதப்படுகிறது.
அப்படியாக நம்முடைய பிரச்சனைகள் தீர கார்த்திகை மாதத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள், மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள், இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
நாம் தேர்ந்து எடுத்த நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் ஒரு தாம்பூலத்தில் வாசனை மிகுந்த விபூதியை கொட்டி பரப்பிக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
அந்த பூஜையில் நம்மால் முடிந்த ஒரு நைவேத்தியம் படைக்கவேண்டும்.முடியாத பட்சத்தில் ஒரு டம்ளர் தண்ணீரையாவது வைக்க வேண்டும்.பிறகு ஏற்றிய தீபத்தை மனதார நினைத்து வழிபாடு செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிர வைக்க வேண்டும்.
இவ்வாறு கார்த்திகை செவ்வாய் கிழமை வீட்டில் வழிபாடு செய்ய வீட்டில் மங்களம் உண்டாகி இறைவனின் அருளால் விரைவில் உங்கள் கடன் பிரச்சனைகள் எல்லாம் விலகி நிம்மதியான சூழல் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |