நாளை மறக்காமல் நாம் செய்ய வேண்டிய கார்த்திகை சோமவார வழிபாடு
கார்த்திகை மாதத்தில் பல சிறப்புகள் இருக்கிறது.அப்படியாக நாளை கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் அன்றைய தினம் ஈசனை மனதார நினைத்து தங்கள் வேண்டுதல் வைக்க நிச்சயம் அது நடக்கும்.அப்படியாக நாளை சோமவாரம் அன்று நாம் எவ்வாறு ஈசனை வழிபட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
சோமவாரம் ‘சோமன்’ என்றால் சந்திரனை குறிக்கிறது. சந்திரனை, சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கிறார். சந்திரன் என்பவன் மனோகாரகன். ஒருவர் ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியில்லை என்றால் அவன் வாழ்க்கையில் மன குழப்பம் அதிகமாக இருக்கும்.
அவர்களால் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாது. அப்படியானவர்கள் நாளைய தினமும் எம்பெருமானை வழிபாடு செய்ய அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் சந்திரன் பலம் அடைவார்.
மேலும் அமாவாசையில் பிறந்தவர்கள், அமாவாசைக்கு முன்பு மூன்று நாட்களில் பிறந்தவர்கள், அமாவாசைக்கு பின்பு மூன்று நாட்களில் பிறந்தவர்கள், நாளை கட்டாயம் ஈசனை வழிபடுவது சிறந்த பலனை தரும்.
சில நபர்களுக்கு அவர்கள் எதிர் பார்த்த காரியம் அருகில் நெருங்குவது போல் இருந்தாலும் பக்கத்தில் வந்த உடன் அது விலகி செல்லும்.அதனால் அவர்கள் மிகவும் மன வேதனை அடைவார்கள். வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டம்,அவமானங்கள் துன்பங்கள் அனுபவித்தே கொண்டே இருப்பார்கள்.
இன்னும் சொல்ல போனால் வாழ்க்கையின் மீது இருக்கும் நம்பிக்கையே அவர்கள் இழந்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் நாளைய தினம் கட்டாயம் ஈசன் திருவடிகளை பற்றி கொள்வது அவசியம்.
நாளை வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி ஓம் நமச்சிவாய என்று மனதார சொல்லி வழிபாடு செய்ய ஈசன் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷடங்கள் குறைப்பதோடு சந்திரனால் உண்டாகும் மன குழப்பங்கள் போக்கி வாழ்வை தெளிவு அடைய செய்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |