கருடன் இருக்க கவலை ஏன்?
நாம் அனைவரும் கருட பகவானை பற்றி தெரிந்து இருப்போம்.பெருமாளின் வாகனமான கருட பகவானை மனதார வழிபட நாம் வாழ்க்கையில் மிக பெரிய உயரத்திற்கு செல்வோம்.இயல்பாக சிலர் வெகுளியாகவும்,பயந்த குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் கருடனை வழிபாடு செய்ய அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு தைரியம் பிறக்கும்.மேலும் கருட பகவானின் அருளை பெற கருட மந்திரம் இருக்கிறது.இதை சொல்வதால் நாம் வெற்றி பெற முடியாது என்ற நினைத்த காரியமும் கைகூடி வரும்.
மந்திரம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய,
வேத ரூபாய வினதா புத்ராய,
விஷ்ணு பக்தி பிரியாய,
அம்ருத கலச ஹஸ்தாய,
பஹ பராக்ரமயா,
பக்ஷி ராஜாய, சர்வ வக்ர,
சர்வ தோஷ, சர்ப்ப தோஷ,
விஷ சர்ப்ப வீநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லவேண்டும்.முடியாதவர்கள் காலை மாலை 11 முறை சொல்லவேண்டும்.இப்படியாக தொடர்ந்து 48 நாள் சொல்லி வர நமக்கு உண்டான எதிரிகள் தொல்லை விலகும்.
தேவை இல்லாத எதிர்மறை எண்ணம்.பயம்,பதட்டம் விலகி தைரியம் பிறக்கும்.நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.கஷ்டப்படும் காலத்தில் தெரியாதவர்களும் உதவி செய்வர்.இந்த கருட மந்திரம் மிகப்பெரிய கவசமாக இருந்து உங்களை காப்பாற்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |